திருக்கேதீஸ்வரத்தில் மத வெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்ட பிள்ளையார் சிலை என்று கூறி ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதைக் கண்டோம்.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Aa thee fm என்ற பேஸ்புக் பக்கத்தில் ” மேன்மை கொள் சைவ நீதி

திருக்கேதீஸ்வரத்தில் மத வெறியர்களால் இன்று அதிகாலை அடித்து நொருக்கப்பட்ட பிள்ளையார்!!” என்று கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு ஆய்வினை மேற்கொண்ட போது குறித்த புகைப்படங்கள் சில வருடங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தமை எமக்கு நினைவிற்கு வந்தது.

நாம் திருக்கேதீஸ்வரத்தில் இடம்பெற்றிருந்த ஆலய சிலை உடைப்புகள் தொடர்பாக வெளியாகிருந்த செய்திகளை நாம் ஆய்வு செய்தோம்.

குறித்த தேடுதலின் போது 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய புகைப்படத்தினை தற்போது நடந்த சம்பவமாக பகிரப்படுவது உறுதி செய்யப்பட்டது.

2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி மன்னாரிலிருந்து திருக்கேதீஸ்வரம் செல்லும் வழியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை, இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது நடந்த சம்பவம் போன்று பகிரப்பட்டு வருகின்றது.

Hiru News | Archived Link

மேலும் நாம் தேடுதலில் ஈடுப்பட்ட வேளையில் 2017 ஆம் ஆண்டு சிவசேனை வவுனியா என்ற பேஸ்புக் பக்கத்தில் குறித்த புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Facebook Link | Archived Link

மேலும் இதனை உறுதி செய்து கொள்வதற்காக நாம் கடந்த 30 நாட்களில் திருக்கேதீஸ்வரம் தொடர்பில் வெளியாக செய்திகளை நாம் தேடுதலுக்கு உட்படுத்தினோம்.

குறித்த தேடலின் போது, திருக்கேதீஸ்வரத்தில் நடந்த ஆடி அமாவாவை பிதிர்க் கடன் நிறைவேற்றல் தொடர்பாக வெளியான செய்திகளே வெளியாகியிருந்தது.

மேலும் நாம் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு இது தொடர்பாக ஆராய்வதற்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்பின் போது, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆலய சிலையின் மீது சிறு தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாகவும் ஆயினும் அது இரண்டு மாதங்களுக்கு முன்னர் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய திருக்கேதீஸ்வரத்தில் அடித்து நொறுக்கப்பட்ட பிள்ளையார் சிலை என பேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படங்கள் 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்துடன் தொடர்பானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட ஆதாரங்களுடன் திருக்கேதீஸ்வரத்தில் அடித்து நொருக்கப்பட்ட பிள்ளையார் சிலை என பேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படங்கள் 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்துடன் தொடர்பானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:திருக்கேதீஸ்வரத்தில் அடித்து நொறுக்கப்பட்டதா பிள்ளையார் சிலை?

Fact Check By: Nelson Mani

Result: False