
இமயமலைப் பிரதேசத்தில் 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிவலிங்கப் பூ என்று ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் உலா வருவதை நாம் அவதானித்தோம்.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Kirupakaran Karan என்ற பேஸ்புக் கணக்கில் ” “சிவலிங்கப் பூ” இமயமலைப் பிரதேசத்தில் 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்குமாம்! இதனைப் பார்ப்பதே புண்ணியமாம்! நன்றாகப் பார்த்துப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்!!” என்று 7 கடந்த ஆம் திகதி (07.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் குறித்த புகைப்படத்தின் கீழ் பதியப்பட்ட கமெண்டுக்களை பரிசோதனை செய்தோம்.

குறித்த பரிசோதனையின் போது, பலரும் குறித்த பதிவு போலியானது என தமது சந்தேகங்களை வெளியிட்டிருந்தனர்.
மேலும் நாம் கூகுளிலில் சிவலிங்கப் பூ என தேடுதலில் ஈடுபட்டோம்.

அப்போது சிவலிங்கப் பூ என வேறு ஒரு பூவின் புகைப்படமே எமக்கு காணக்கிடைத்தது. குறித்த பேஸ்புக் பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படம் அதில் காணக்கிடைக்கவில்லை.
இதன்போது, குறித்த புகைப்படத்தில் உள்ள தாவரம் என்ன என்று நாம் மேலும் தேடுதலில் ஈடுப்பட்டபோது,
குறித்த தாவரம் மெஜஸ்டிக் சிக்காஸ், அல்லது சைக்காஸ் என்ற பெயரினால் அழைக்கப்படும் ஒரு தாவரம் என கண்டறிப்பட்டது.
பனை மரத்தை நினைவூட்டும் குறித்த தாவரம் வீட்டுகளில் அழகிற்காக வழக்கப்படுகின்றது. முழு அறிக்கை
மேலும் பேஸ்புக் பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படமானது,

சைக்காஸ் ஆண் மரத்தின் புகைப்படம் என எமது தேடுதலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், சிவலிங்கப் பூ என்று கூறப்படும் தகவல் தவறானது என தெரியவருகிறது. குறித்த புகைப்படம் மெஜஸ்டிக் சிக்காஸ், அல்லது சைக்காஸ் என்ற தாவர இனத்தின் ஆண் தாவரங்களின் பூக்கும் பூவாகும்.