பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கொட்கி நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அதிபர் மத நிந்தனையில் ஈடுபட்டதாக அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் முறைப்பாடு செய்ததையடுத்து அந்தப் பிராந்தியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.09.2019) பாரிய மதக் கலவரம் இடம்பெற்றுள்ளது.

தகவலின் விவரம்:

Virakesari | Archived Link

Virakesari என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த செவ்வாய் கிழமை (17.09.2019) ”பாகிஸ்தானில் மதக்கலவரம்” என்ற பதிப்போடு ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த பதிவில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படம் சம்பவத்தோடு தொடர்புடையதா என்ற சந்தேகம் எழுந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த பதிவில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட வேளையில் குறித்த புகைப்படமானது, 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இடம்பெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதிசெய்யப்பட்டது.

மேலும் இது குறித்து ஆய்வினை உண்மையில் பாகிஸ்தானில் மதக்கலவரம் ஏற்பட்டிருந்ததா என்ற தேடிய வேளையில் மதக்கலரவம் இடம்பெற்றிருந்தமை உண்மை என்பது குறிப்பிடத்தக்கது. முழு அறிக்கை

News link

மேலும் குறித்த செய்தி இணையத்தளத்தில் வெளியாகியிருந்த புகைப்படங்களையும் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆராய்ந்த வேளை அது குறித்த சம்பவத்துடன் தொடர்புடையது என கண்டுபிடிக்கப்பட்டது.

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் செய்தியில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படமானது 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இடம்பெற்றிருந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது.

Avatar

Title:பாகிஸ்தானில் மதக்கலவரம் என்று வெளியான புகைப்படங்கள் உண்மையா?

Fact Check By: Nelson Mani

Result: Mixture