ராமர் கோவில் கட்டுமான தொழிலாளர்களுடன் உணவருந்திய மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Update: 2023-12-30 10:53 GMT

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உணவு உட்கொண்டார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உணவு உட்கொள்ளும் புகைப்படத்துடன் ஃபேஸ்புகில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், " அயோத்யா இராமர் கோவில் கட்டிய கட்டிட தொழிலாளர்களுடன் உணவருந்திய பாரத பிரதமர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது ஃபேஸ்புக்கில் 2023 டிசம்பர் 21ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

ராமர் கோவில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி அயோத்திக்கு சென்றதாக செய்திகள் எதுவும் இல்லை.

மேலும், இந்த புகைப்படம் காசி விஸ்வநாதர் ஆலய பகுதியில் மேற்கொண்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்களுடன் மோடி உணவு உட்கொண்ட படம் என்பதால் இந்த தகவல் தவறானது என்று தெரிந்தது. எனவே, இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பல ஊடகங்களும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருப்பது நமக்கு கிடைத்தது. ஏஎன்ஐ செய்தி ஊடகம் இந்த புகைப்படத்துடன் 2023 டிசம்பர் 13ம் தேதி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "காசி விஸ்வநாதர் கோவில் வளாக கட்டுமான திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மதிய உணவு உட்கொண்டார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

https://twitter.com/ANINewsUP/status/1470326107559776259

Archive

2021ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி காசி விஸ்வநாதர் கோவில் வளாகம்-1 திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்று இந்தியா டுடே ஆங்கிலம், தமிழ் இந்து உள்ளிட்ட ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருந்தது. மேலும், திறப்பு விழாவுக்கு முன், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களுடன் உரையாடிய நரேந்திர மோடி, அவர்களின் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார் என்றும் உணவு உட்கொண்டார் என்றும் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

https://youtu.be/EOslDjgkY6k

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், 2021ல் காசியில் காசி விஸ்வநாதர் கோவில் வளாக திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் நரேந்திர மோடி உணவருந்திய படத்தை. அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணி என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2021ம் ஆண்டு காசியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அயோத்தி ராமர் கோவில் கட்டுமான தொழிலாளர்களுடன் உணவு உட்கொண்ட மோடி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

.hocal-container {

border: 2px solid #000;

background-color: #eee;

border-radius: 5px;

padding: 16px;

margin: 16px 0

}

.hocal-container::after {

content: "";

clear: both;

display: table;

}

.hocal-container img {

float: left;

margin-right: 20px;

border-radius: 50%;

}

.hocal-container span {

font-size: 20px;

margin-right: 15px;

}

@media (max-width: 500px) {

.hocal-container {

text-align: center;

}

.hocal-container img {

margin: auto;

float: none;

display: block;

}

}

Title:ராமர் கோவில் கட்டுமான தொழிலாளர்களுடன் உணவருந்திய மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False

Tags: