மனித இறைச்சி ஜப்பானில் விற்கப்படுகிறதா?

Update: 2020-08-24 17:56 GMT

‘’ஜப்பானில் மனித இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது,’’ என்று பேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Shahul Hameed என்ற பேஸ்புக் கணக்கில் ” ஜப்பானிலுள்ள ‘சாப்பாட்டு சகோதரர்கள்’ எனும் உணவகம் ஒன்று உலகிலேயே முதன் முறையாக அந்த நாட்டு அரசின் அனுமதியுடன் மனித கறி விற்பனை செய்து வருகிறது.ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு வழங்கப்பட்டவுடன் பலரும் அந்த உணவகத்துக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனராம்.இந்த மனித கறியில் செய்யப்பட்ட உணவுகள் பல விலைகளில் கிடைக்கிறது.100 டொலரிலிருந்து அதிகபட்சமாக 1193 டொலர் வரை உணவுகள் கிடைக்கின்றதாக கூறப்படுகிறது.இதில் முக்கியமானவொரு விடயம் என்னவெனில், இந்த உணவகத்திற்கு எவ்வாறு மனித இறைச்சி கிடைக்கின்றது என்ற விடயத்தையும் அந்த உணவகம் வெளிப்படுத்தியுள்ளது.அதன் படி ஏற்கனவே இறந்த பின் உடல் விற்பனைக்கு என்று கூறியவர்களின் உடல்களை மட்டுமே அவர் வாங்கி சமைப்பதாக தெரிவித்துள்ளனர்.ஒரு உடலை இவர்கள் 35,799 கொடுத்து கொள்வனவு செய்கின்றனர்.அத்தோடு 30 வயதிற்கு குறைவான நோயினால் பாதிக்கப்படாத உடல்களையே கொள்வனவு செய்கிறார்களாம்.இதனையடுத்து ‘பன்றி கறி போலவே மனித கறியும் இருப்பதால் எந்த வித வித்தியாசமும் இன்றி சுவையாக இருப்பதாகவும், மிகவும் மசாலா தடவி வித்தியாசமாக இருக்கின்றது ‘என அங்கு வந்து உணவருந்திய மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

காலம் கலியுகமாகி விட்ட நிலையில் இவ்வாறான மனத குலத்திற்கே இழுக்கான காரியங்கள் நடக்கத் தான் செய்யும்… என்ன செய்வது எங்களால் நடப்பதை பார்த்துக் கொண்டிருக்க தான் முடியும். உலகின் முடிவு நெருங்கி விட்டதாக விஞ்ஞானிகள் கூறுவது உண்மையாகி விடுமோ என எண்ணத் தோன்றுகின்றது.” என்று 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி (06.12.2017) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு Google Reverse Image Tool பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டோம்.

குறித்த தேடுதலின் போது எமது இந்திய தமிழ் பிரிவினரும் அதை போன்று சில உண்மை கண்டறியும் நிறுவனங்களும் சோதனை செய்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

Factcrescendo Tamil | Boom Live

2016 ஆம் ஆண்டு ஸ்பெயின் மொழியில் கற்பனையான நகைச்சுவை செய்திகளை பகிரும் இணையதளம் ஒன்று (lavozpopular.com), குறித்த செய்தியை முதன்முதலாக வெளியிட்டிருந்தது. அதனை உலகம் முழுக்க மொழிபெயர்ப்பு செய்து தங்களது மொழியில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

Lavozpopular.com Link | Archived Link

குறித்த இணையதளமே தங்களது இணையத்தளத்தில் வெளியாகும் செய்தி, கற்பனையானதுதான் என்றும், இதனை யாரும் உண்மை என நம்பி சர்ச்சை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர்களே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த செய்தி நகைச்சுவையாக உருவாக்கப்பட்டிருந்ததை பலரும் உண்மையென நம்பி தற்போது பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் இதேபோன்ற தகவல் பரவியபோது, வாஷிங்டனை சேர்ந்த ஜப்பானிய தூதரக அதிகாரி உரிய மறுப்பு தெரிவித்துள்ளார்.

Citynews1130 Link | Scmp.com Link | Dailyo.in Link

எமது இலங்கை சிங்களப்பிரிவினரும் குறித்த செய்தி போலியானது என உண்மை ஆய்வினை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

குறித்த செய்தியினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இதற்கமைய மனித இறைச்சி உண்மையில் விற்கப்படுகிறது என வெளியானது செய்து போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

.hocal-container {

border: 2px solid #000;

background-color: #eee;

border-radius: 5px;

padding: 16px;

margin: 16px 0

}

.hocal-container::after {

content: "";

clear: both;

display: table;

}

.hocal-container img {

float: left;

margin-right: 20px;

border-radius: 50%;

}

.hocal-container span {

font-size: 20px;

margin-right: 15px;

}

@media (max-width: 500px) {

.hocal-container {

text-align: center;

}

.hocal-container img {

margin: auto;

float: none;

display: block;

}

}

Title:மனித இறைச்சி ஜப்பானில் விற்கப்படுகிறதா?

Fact Check By: Nelson Mani

Result: False

Tags:    

Similar News