வெலிக்கந்த சமையல் எரிவாயு வெடிப்பில் இவர் உயிரிழந்தாரா?

Update: 2021-11-30 12:02 GMT

INTRO :
வெலிக்கந்த பகுதியில் சமையல் எரிவாயு வெடித்ததில் உயிரிழந்த பெண் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பெண் பலி; வெலிக்கந்தையில் சம்பவம்

---------------------------------------------------------------------

https://thinakkural.lk/article/152424

பொலன்னறுவை வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய திருமணமான பெண் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வெலிகந்த, சந்துன்பிட்டிய, இலக்கம் 68 இல் வசிக்கும் பி.ஜி. ஆயிஷா குமுதுனி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் எவரும் இல்லாமையால் அயலவர்கள் வருகை தந்து சமையல் அறை முழுவதும் எழுந்த தீயை அணைத்து குறித்த பெண்ணை வெலிக்கந்த பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி வீட்டின் சமையலறையில் எரிவாயு அடுப்பை பற்ற வைக்கச் சென்ற போது அது எரியாததால் தீக்குச்சியால் பற்ற வைக்க முற்பட்ட போது எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரதேசவாசிகள் வெலிக்கந்த பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சடலத்தை இன்று தகனம் செய்வதற்காக உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸ் பொறுப்பதிகாரி சமந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வெலிக்கந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவம் தொடர்பாக விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று இறுதிச் சடங்கு செய்யவென குடும்பத்தாரிடம் குறித்த பெண்ணின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கொள்வனவு செய்த சிலிண்டர் இவ்வாறு வெடித்தமையால் தனது மகள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக பெண்ணின் தந்தையான திம்புலாகல பகுதியைச் சேர்ந்த 51 வயதான பி.ஜி. ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகள் விசேட விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜெயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். “ என கடந்த செம்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி (26.11.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் குறித்த சம்பவம் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்வதற்காக நாம் முதலில் வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் வினவியபோது, இந்த சம்பவம் தற்கொலை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தர்க்கத்தினால் குறித்த யுவதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தன்னை தானே தீ பற்றவைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த பெண் தற்கொலை செய்து கொள்ளுவதற்கு முன்னர் மண்ணெண்ணெய் போத்தலின் புகைப்படத்துடன் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக அவரின் கணவருக்கு வாட்ஸ்அப் மூலம் குறுந்தகவல் அனுப்பியதாகவும், அவர் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் தீ பற்றவைத்தமையால் குறித்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில், வீட்டின் கேஸ் சிலிண்டர் அல்லது கேஸ் அடுப்பில் ஏற்பட்ட தீயினால் இந்த விபத்து ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளதாக அவர்கள் எமக்கு தெரிவித்தனர்.

குறித்த யுவதி கொழும்பில் உள்ள இலங்கை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக வைத்தியசாலை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் மேற்கொண்ட விசாரணையின் போது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பில் உள்ள தடயவியல் நிபுணர் வைத்தியர் ரூஹுல் ஹக்கிடம் தொடர்பு கொண்டு வினவியபோது, ஆயிஷா குமுதுனி என்ற மரணித்த பெண்ணின் பிரேதப் பரிசோதனையின் படி, பெரும்பாலான மண்ணெண்ணெய் நெஞ்சுப் பகுதியில் ஊற்றப்பட்டதாகவும், தீயினால் நெஞ்சுப் பகுதி கடுமையாக எரிந்ததாகவும், மண்ணெண்ணெய் பயன்படுத்தி தீ வைத்து எரித்த பிறகு வெளிப்புற தீக்காயங்கள் பாக்டீரியா தொற்று காரணமாக குறித்த மரணம் ஏற்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பாக வெளியான பொலிஸ் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், வெலிக்கந்த சமையல் எரிவாயு வெடிப்பில் உயிரிழந்த பெண் என வெளியான செய்தி தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்


எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

.hocal-container {

border: 2px solid #000;

background-color: #eee;

border-radius: 5px;

padding: 16px;

margin: 16px 0

}

.hocal-container::after {

content: "";

clear: both;

display: table;

}

.hocal-container img {

float: left;

margin-right: 20px;

border-radius: 50%;

}

.hocal-container span {

font-size: 20px;

margin-right: 15px;

}

@media (max-width: 500px) {

.hocal-container {

text-align: center;

}

.hocal-container img {

margin: auto;

float: none;

display: block;

}

}

Title:வெலிக்கந்த சமையல் எரிவாயு வெடிப்பில் இவர் உயிரிழந்தாரா?

Fact Check By: S G Prabu

Result: False

Tags:    

Similar News