குடிநீர் எடுக்க வந்த குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக பரவும் வீடியோ உண்மையா?

Update: 2023-10-27 13:48 GMT

INTRO :

குடிநீர் எடுக்க வந்த குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “இதை விட இஸ்ரேலிய காட்டுமிராண்டித் தனத்தை எப்படி வர்ணிக்கலாம்.

கிழக்கு காசாவில் உள்ள தண்ணீர் தொட்டியில் குடிநீரைப் பெறுவதற்காக குழந்தைகள் குழு ஒன்று கூடுகிறது, ஆக்கிரமிப்பு இஸ்ரேலியர்கள் அவர்கள்மீது குண்டு எரிந்து கொலை செய்து வீடியோ எடுத்த போது “ என இம் மாதம் 23 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (23.10.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

நாம் முதலில் குறித்த வீடியோவை புகைப்படமாக மாற்றி அந்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, x (டுவிட்டர்) சமூகவலைத்தளத்தில் கடந்த அக்டோபர் 12 ஆம் திகதி அல்ஜசிரா ஊடகத்தின் அரபு ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், சூடானில் ரேப்பிட் சப்போர்ட் ஃபோர்ஸை சேர்ந்தவர்கள் எரிபொருள் நிரப்ப வந்த போது அவர்கள் மீது சூடான் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

https://twitter.com/Sudan_tweet/status/1712408936928686208

Archived Link

அதே போன்று Sudan News என்ற x (டுவிட்டர்) பக்கத்திலும் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அதிலும் கூட சூடான் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதல் என்றே குறிப்பிடப்பட்டிருந்ததா. வேறு சிலரும் சூடான் ராணுவம் நடத்திய தாக்குதல் என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை 2023 அக்டோபர் 13 ஆம் திகதி பதிவிட்டிருந்தனர்.

https://twitter.com/NoiseAlerts/status/1712572059929489910

Archived Link

நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி தண்ணீர் எடுக்கச் சென்ற குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அல்ஜசீரா உள்ளிட்ட ஊடகங்கள் இந்த வீடியோ சூடானைச் சார்ந்தது என்று செய்தி வெளியிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

.hocal-container {

border: 2px solid #000;

background-color: #eee;

border-radius: 5px;

padding: 16px;

margin: 16px 0

}

.hocal-container::after {

content: "";

clear: both;

display: table;

}

.hocal-container img {

float: left;

margin-right: 20px;

border-radius: 50%;

}

.hocal-container span {

font-size: 20px;

margin-right: 15px;

}

@media (max-width: 500px) {

.hocal-container {

text-align: center;

}

.hocal-container img {

margin: auto;

float: none;

display: block;

}

}

Title:குடிநீர் எடுக்க வந்த குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக பரவும் வீடியோ உண்மையா?

Written By: S.G.Prabu

Result: False

Tags:    

Similar News