ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தத் தலைவர் பதவி ரணிலுக்கா ?

By :  S G Prabu
Update: 2024-10-07 02:28 GMT

INTRO:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் பதிவி கிடைக்கவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

 

Facebook Link | Archived Link

சமூக வலைத்தளங்களில் “ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தத் தலைவர் பதவி ரணிலுக்கு! ” கடந்த மாதம் 24 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (24.09.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதை நாட்டின் பிரதான ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஊடாக நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, அவ்வாறான செய்திகள் எதனையும் காணமுடியவில்லை.

அதன்பிறகு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகப்பூர்வ இணையதளம் மூலம் ஆய்வு செய்ததில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஆளுநர் வாரியம், வங்கியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியைத் தொடங்கியிருப்பதைக் கண்டறிந்தோம்.

செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை சமர்ப்பிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, மேலும் மின்னணு வாக்குப்பதிவு முறையைப் பயன்படுத்தி அக்டோபர் 28 முதல் நவம்பர் 27 வரை தேர்தல் நடைபெறும்.

அதன்படி, இத்தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தலைவர் தெரிவுக்கான தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. வருகின்ற நவம்பர் 28 ஆம் திகதி அன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் அறிவிக்கப்படுவார், அதாவது ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கான தேர்தல் முடிவுகள் நவம்பர் 28 ஆம் திகதி வெளியான பின்னர் தலைவரின் பெயர் அறிவிக்கப்படும்.

 

adb.org | Archived Link

மேலும், தற்போதைய ஆசிய அபிவிருத்தி வங்கியின் வாரியத் தலைவர் Masatsugu Asakawa ஆவார். இலங்கை ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையில் உறுப்பினராக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டின் ஆளுநராகவும், திரு.கே.எம்.மகிந்த சிறிவர்தன மாற்று ஆளுநராக உள்ளனர். இலங்கையின் புதிய ஜனாதிபதி பதவியேற்றம் நடைப்பெற்றதன் பின்னர், கடந்த மாதம் 27 ஆம் திகதி புதிதாக ஆசிய அபிவிருத்தி வங்கி இணையத்தளத்தில் அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரிற்கு மாற்றிடாக மாற்றம் செய்யப்பட்டது.

 

adb.org | Archived Link

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக திரு ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குறிப்புகள் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் எமக்கு உறுதிசெய்தார்.

மேலும் அவர் இந்த பதவிக்கு போட்டியிடவுள்ளாரா என வினவியதற்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் குறித்த பதவியிற்கு போட்டியிடவில்லை எனவும் அறியத்தந்தார்.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தத் தலைவர் பதவியிற்கு ரணில் என பரவும் தகவலில் உண்மைத்தன்மை இல்லை என கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Claim :  ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தத் தலைவர் பதவியிற்கு ரணில்
Claimed By :  Social Media User
Fact Check :  MISLEADING
Tags:    

Similar News