INTRO :
இலங்கையில் மீண்டும் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு தரப்பில் போலி தகவல்கள் பரவி வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.

அதில் ஐ.டி.எச் மருத்துவமனையின் ஆலோசனை என சில தகவல்கள் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இது போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

SLMC என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #விரைவில்_விநியோகிக்கவும்

ஐ.டி.எச் மருத்துவமனையின் ஆலோசனை

1. வைட் சி -டேப்லெட்டை எடுத்துக் கொள்ளுங்கள்

2. வைட்டமின் ஈ மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள்.

3. காலை 10 -11 க்கு இடையில் 15-20 நிமிடங்கள் சூரியனை வெளிப்படுத்துங்கள்.

4. முட்டைகளை ஒரு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.

5. ஒவ்வொரு 7-8 மணி நேரத்திற்கும் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்

6. ஒரு நாளைக்கு 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொரு உணவும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக இல்லை)

கொரோனா வைரஸிற்கான pH 5.5 முதல் 8.5 வரை வேறுபடுகிறது மற்றும் கொரோனா வைரஸைத் தோற்கடிக்க நாம் வைரஸின் pH அளவை விட அதிக கார உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அவற்றில் சில:

* எலுமிச்சை - 2.34- 1.8 பி.எச்

* சுண்ணாம்பு - 1.8 பி.எச்

* வெண்ணெய் - 15.6 பி.எச்

* பூண்டு - 13.2 pH *

* மா - 8.7 பி.எச்

* டேன்ஜரின் - 8.5 பி.எச்

* அன்னாசிப்பழம் - 12.7 பி.எச்

* ஆரஞ்சு - 9.2 பி.எச்

உங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது எப்படி தெரியும்?

1. தொண்டையில் அரிப்பு

2. உலர் தொண்டை

3. உலர் இருமல்

4. அதிக வெப்பநிலை

5. மூச்சுத் திணறல்

6. வாசனை மற்றும் சுவை இழப்பு

எனவே நீங்கள் இந்த விஷயங்களில் கவனம் செலுத்தும்போது, ​​விரைவாக எலுமிச்சையுடன் சூடான நீரை எடுத்து குடிக்கவும்.

இந்த தகவலை உங்களிடம் வைத்திருக்க வேண்டாம். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கொடுங்கள். கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள். ” என இம்மாதம் 07 ஆம் திகதி (07.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

ஐ.டி.எச் மருத்துவமனையினை எமது குழுவினர் தொடர்புக்கொண்டு மேற்கொண்ட விசாரனையில் கொரோனா பி.எச் தொடர்பில் எவ்விதமான அறிக்கையினையும் வெளியிடவில்லை என தெரிவித்தனர்.

மேலும் குறித்த தகவல் போலியானது எனவும் தெரிவித்தனர்.

குறித்த பி.எச் தகவல் இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்திய நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பகிரப்பட்டு வந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.அக்கால பகுதியில் எமது குழுவினர் குறித்த செய்திகளின் உண்மை தன்மையினை கண்டறிந்து அவைகளில் திருத்தங்கள் மேற்கொண்டிருந்தோம்.

இது தொடர்பாக எமது நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வறிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளன.

ஆங்கிலம் | மராத்தி

பி.எச் என்றால் என்ன?

ஒரு கரைசலின் தன்மையை அமிலமா அல்லது காரமா என்று குறிப்பதாகும். ஒரு கரைசலின் அமிலக்காரத்தன்மை என்பது அக்கரைசலில் உள்ள ஐதரசன் (நீர்வளி) அயனிகளின் அளவினால் தீர்மானிக்கப்படுகிறது.

காரகாடித்தன்மைச் சுட்டெண்னின் வேதியியல் வரையறை, "ஐதரசன் அயனிகளின் எதிர்மறையான மடக்கை ஆகும்".

கார காடித்தன்மைச் சுட்டெண் 0ல் இருந்து 14 வரை கணக்கிடப்படுகிறது. சுத்தமான நீரின் அமிலக்காரதன்மை 25 °Cல் 7.0 ஆகும், இதை நடுநிலை என்று அழைக்கப்படுகிறது. ஏதேனும் கரைசலில் 7.0 க்கும் கீழ் அமிலக்காரதன்மை இருந்தால் அக்கரைசல் அமிலமாகவும், அல்லது கரைசலில் 7.0 க்கும் மேல் அமிலக்கார தன்மை இருந்தால் அக்கரைசல் காரமாகவும் கருதப்படுகிறது.

கார காடித்தன்மைச் சுட்டெண் கண்டறிதல் மருத்துவம், உயிரியல், வேதியியல், உணவு அறிவியல், சூற்றுப்புறச்சூழல் அறிவியல், கடலியல் போன்ற துறைகளில் மிகவும் அடிப்படையான ஒன்றாகும்.

விக்கிப்பீடியா

Twitter link | Archived Link

இதற்கமைய எமது ஆய்விலிருந்து பி.எச் தொடர்பாக ஐ.டி.எச் மருத்துவமனையில் ஆலோசனை என வெளியான தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

Avatar

Title:கொரோனா பி.எச் அளவு பற்றி ஐ.டி.எச் மருத்துவமனை ஆலோசனையா?

Fact Check By: Nelson Mani

Result: False