ஜனாதிபதி தேர்தலில் 50.30% பெற்று அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உள்ளாரா?

By :  S G Prabu
Update: 2024-09-22 11:35 GMT

INTRO:

ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்க 50.30% வாக்குகளை பெற்றுள்ளதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

 

Facebook Link | Archived Link

சமூக வலைத்தளங்களில் “*முழுமையான தேர்தல் முடிவுகள்*

*💫அநுர - 7017058 (50.30%)*

*💫சஜித் - 5083968 (36.44%)*

*💫ரணில் - 1182234 (8.47%)*

*💫நாமல் - 406137 (2.91%)*

*ஏனையோர் - 260464 (1.86%)*

*மொத்த செல்லுபடியான வாக்குகள் - 1 39 4986*” இம் மாதம் 22 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (22.09.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியினை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைப்பெற்று இன்று (22.09.2024) தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டுள்ள நிலையில், முழுமையான தேர்தல் முடிவுகள் என ஒரு தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இறுதி முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும், 2024 ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெறாததால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். .

இதன்படி, அநுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர்ந்த ஏனைய வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.

Full View

இருப்பினும், எந்த வேட்பாளரும் முதல் சுற்றில் 50% பெறாததால், மேற்கண்ட குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த வாக்குப்பதிவு முடிவுகள் தவறானவை என்று சுட்டிக்காட்டலாம்.

1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டம் எண் 15 இன் படி, பிரிவு 57 இன் அடிப்படையில் வரலாற்றில் முதல் முறையாக இரட்டை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

இதன்படி, முதல் அதிக வாக்குகளைப் பெற்ற அநுர குமார திசாநாயக்க மற்றும் இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதாச தவிர மீதமுள்ள அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஜனாதிபதி தேர்தலில் 50.30% பெற்று அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உள்ளார் என பரவும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Claim :  ஜனாதிபதி தேர்தலில் 50.30% பெற்று அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உள்ளார்
Claimed By :  Social Media User
Fact Check :  FALSE
Tags:    

Similar News