கண்காணிப்பு பணிக்காக 25 மாவட்டங்களுக்கு தலா 10 பேர் விதம் ஜனாதிபதியால் நியமனம்INTRO:

நாட்டின் 25 மாவட்டங்களுக்கு தலா 10 பேர் விதம் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நியமனம் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூக வலைத்தளங்களில் “சம்பவம் சிறப்பு 🔥🔥🔥

நாட்டின் 25 நிருவாக மாவட்டங்களுள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பேர் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நியமனம்...!

யார் இந்த 250 பேரும்.....!

✅#கட்டுப்பாட்டு விலையை கடந்து பொருட்களை விற்கும் கடைக்காரர்கள்.

✅#அரசபேருந்தில் பயணச்சீட்டு வழங்காமல் காசை வேண்டும் நடத்துநர்கள்.

✅#போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் கண்மூடித்தனமாக வாகனமோட்டும் சாரதிகள்.

✅#அரச அலுவலகங்களில் கடமையை செய்யாமல் மக்களை அலைக்கழிக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் அரச அதிகாரிகள்.

✅#சட்டத்திற்கும் சிஸ்டத்திற்கும் புறம்பாக அடிமட்ட உத்தியோகத்தர்களை பழிவாங்கும் மேலதிகாரிகள்.

✅#அரச அலுவலகங்களில் கூடிய 30 நிமிடத்திற்கு மேலாக சேவையை வழங்காமல் தேவையற்ற இழுத்தடிப்பு செய்யும் அரச சேவையாளர்கள்.

✅#அலுவலகமொன்றிலிருந்து அல்லது பொதுமகனிடமிருந்து கிடைக்கப்பெறும் கடிதங்களுக்கு கூடிய 14 நாட்களுக்குள் பதிலளிக்காத உத்தியோகத்தர்கள்.

✅#சேவை பெறுநர்களை ஒருமையில் மரியாதைக்குறைவாக நடத்தும் அதிகாரிகள்.

✅#நோயாளிகளை கடிந்து பேசும் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள்.

✅#கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் பிழைப்பு நடத்தும் வைத்தியர்கள்.

✅#பாடசாலை நேரத்தில் தனியார் நிறுவனங்களில் வகுப்பெடுக்கும் பாடசாலை ஆசிரியர்கள்.

✅#வெற்றிலை பாக்கு தரித்து அரச பேருந்தில் பயணிப்போர் மற்றும் பொது இடத்தில் வெற்றிலையை உமிழ்வோர்.

✅#மதுபோதையில் பொது இடத்தில் நின்று குழப்பம் விளைவிப்போர் மற்றும் தூஷண வார்த்தைகள் கொட்டுவோர்.

✅#போக்குவரத்து விதிமீறலுக்காக இலஞ்சம் வாங்கும் பொலிசார் போக்குவரத்து விதியை மீறும் பொலிசார் என 100 ஏற்பாடுகள்.....

என இத்தகையோரை தகுந்த ஆதாரங்களுடன் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த வேண்டும். தெரியப்படுத்தி 48 மணிநேரத்தில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர். இதற்காக வேலையிழப்பு, நஷ்ட ஈடு, சிறைத்தண்டனை போன்றவற்றை அனுபவிக்க நேரிடும்.

இந்த 250 பேரும் யாரென்று அவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர்களுக்குள்கூட ஒருவரை ஒருவர் தெரியாது. இவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவே மாட்டார்கள்.” கடந்த மாதம் 25 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (25.09.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியா அநுர குமார திசாநாயக்க பதிவியேற்றதன் பின்னர் பல அரசியல் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பல தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

அதற்கமைய நாட்டின் 25 நிருவாக மாவட்டங்களுக்கு ஒரு மாவட்டத்திற்கு 10 பேர் வீதம் 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு பணிக்காக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்து.

அது தொடர்பாக நாம் உண்மை தன்மையினை கண்டறிய ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினை தொடர்புக்கொண்டு வினவியபோது, இது முற்றிலும் போலியான தகவல் என ஜனாதிபதி ஊடகப்பிரவின் பொறுப்பாளர் எமக்கு உறுதி செய்தார்.

மேலும், தமது ஆட்சியில் இதுபோன்ற எவ்விதமான தனிப்பட்ட கண்காணிப்பு பணிக்காக ஆட்கள் நியமிக்கப்படமாட்டாது எனவும், இலங்கை பொலிஸ் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே அனைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என எமக்கு உறுதி செய்தார்.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கண்காணிப்பு பணிக்காக 25 மாவட்டங்களுக்கு தலா 10 பேர் விதம் ஜனாதிபதியால் நியமனம் என பரவும் தகவலில் உண்மைத்தன்மை இல்லை என கண்டறியப்பட்டது.

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Claim Review :   கண்காணிப்பு பணிக்காக 25 மாவட்டங்களுக்கு தலா 10 பேர் விதம் ஜனாதிபதியால் நியமனம்
Claimed By :  Social Media User
Fact Check :  FALSE