Safety pin விழுங்கிய குழந்தைக்கு வாட்ஸ்அப் நிதி உதவியா?

Update: 2020-09-16 06:31 GMT

Safety pin விழங்கிய குழந்தைக்கு வாட்ஸ்அப் நிறுவனம் நிதி உதவி வழங்குவதாக ஒரு குழந்தையின் புகைப்படம் வாட்ஸ்அப் செயலியில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

குறித்த புகைப்படத்துடன் ஒரு ஒலிப்பதிவும் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

அப்போது இந்த புகைப்படமானது 2019 ஆம் ஆண்டு முதல் இந்திய சமூக வலைத்தள பயனாளர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.

Link | Archived Link

Link | Archived Link

குறித்த தேடலின் போது, தற்போது ஜாதி வேண்டாம் போடா என்று பகிரப்படும் யுவன் படத்தினை ஒத்த ஓர் புகைப்படம் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலினை மையமாக கொண்டு இது இலங்கையில் இடம்பெற்ற சம்பவமில்லை என்பதோடு குறித்த சம்பவம் சமீபத்தில் இடம்பெற்ற சம்பவமில்லை எனவும் உறுதி செய்ய முடிகின்றது.

பகிரப்படும் புகைப்படத்தினை கவனித்தபோது, குழந்தைக்கு தலையில் தான் அடிப்பட்டுள்ளது.

அந்த குரல் பதிவில் உள்ளவாறு வாட்ஸ்எப் நிறுவன குறித்த புகைப்படத்தினை பகிர்ந்தால் அவர்களுக்கு பண உதவி செய்வார்களா? என்று நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு வாட்ஸ்எப் நிறுவனம் பண உதவிகள் செய்ய மாட்டார்கள் என அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

இதற்கமைய Safety pin விழுங்கிய குழந்தையின் புகைப்படத்தினை பகிர்ந்தால் வாட்ஸ்அப் நிறுவனம் அவர்களுக்கு நிதி உதவி செய்வதாக வெளியாக தகவல் முற்றிலும் போலியானது.

இது குறித்து எமது சிங்களம் மற்றும் மலையாளம் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கைகளை வாசிக்க முடியும்.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

.hocal-container {

border: 2px solid #000;

background-color: #eee;

border-radius: 5px;

padding: 16px;

margin: 16px 0

}

.hocal-container::after {

content: "";

clear: both;

display: table;

}

.hocal-container img {

float: left;

margin-right: 20px;

border-radius: 50%;

}

.hocal-container span {

font-size: 20px;

margin-right: 15px;

}

@media (max-width: 500px) {

.hocal-container {

text-align: center;

}

.hocal-container img {

margin: auto;

float: none;

display: block;

}

}

Title:Safety pin விழுங்கிய குழந்தைக்கு வாட்ஸ்அப் நிதி உதவியா?

Fact Check By: Nelson Mani

Result: False

Tags:    

Similar News