இலங்கையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று (09.10.2019) இலங்கை சுகந்திர கட்சியும் இணைந்தது.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Niyas Shifat என்ற பேஸ்புக் கணக்கில் “கை ; மொட்டு இணைந்துள்ளது கடந்த உள்ளுராட்சி தேர்தல் வாக்குளின் கருத்துக்கணீப்பின் படி இலகுவான வெற்றியை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ச பெறுவார்.-அரசியல் விமர்சகர் ஜோன் பிரீஸ்- ” என்று இன்று (09.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் ஒரு புகைப்படத்தில் கடந்த முறை நடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் படி இலங்கை சுகந்திரகட்சியினதும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியும் பெற்ற மொத்த வாக்குகளின் கூட்டுத்தொகையும் வெளியிடப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

கடந்ந வருடம் நடைப்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெளியான முடிவுகளை நாம் ஆய்வு செய்தோம்.

srilankabrief.org என்ற இணையத்தளத்தில் வெளியான தேர்தல் முடிவுகள்

Website Link | Archived Link

அததெரண இணையத்தளத்தில் வெளியான தேர்தல் முடிவுகள்

Website Link | Archived Link

வீரகேசரி நாளிதழில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வெளியான தேர்தல் முடிவுகள் (13.02.2018) அறிக்கை

மேலுள்ள ஆதரங்களின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 4,941,952 அதன் சதவீதம் 44.65% இலங்கை சுகந்திர கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 1,481,656 அதன் சதவீதம் 13.38% ஆகும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை சுகந்திர கட்சி ஆகிய இரு கட்சிகளின் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 6,423,608 அதன் சதவீதம் 58.03% ஆகும்.

குறித்த பேஸ்புக் பதிவானது விக்கிப்பிடியாவிலிருந்த தகவலினை கொண்டு பதியப்பட்டுள்ளமை எமது ஆய்வின் மூலம் தெரியவந்தது.

Wikipedia link

இதில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 5,006,837 ஆக குறிக்கப்பட்டுள்ளதோடு, உண்மையாக உள்ளூராட்சி தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 4,941,952 அதன் சதவீதம் 44.65% இலங்கை சுகந்திர கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 1,481,656 அதன் சதவீதம் 13.38% ஆகும்.


விக்கிப்பிடியாமற்றைய இணையத்தளம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன5,006,8374,941,952
இலங்கை சுகந்திர கட்சி1,497,2341,481,656
சதவீதம்52.57%58.03

தேர்தல் ஆணையகத்தினால் வெளியிப்பட்ட உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வட்டார ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. முழு அறிக்கை

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்த வருடம் (2018) நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் என வெளியாகியுள்ள குறித்த புகைப்படத்தின் அடங்கியுள்ள தரவுகள் தவறானவை.

Avatar

Title:கடந்த உள்ளூராட்சி தேர்தல் வாக்குகளின் எண்ணிக்கை சரியா?

Fact Check By: Nelson Mani

Result: False