
உலகளவில் வைரலான இளம் தம்பதிகளின் புகைப்படத்தினை வைத்து பல்வேறு கதைகள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
Vavuniya Bazaar என்ற பேஸ்புக் பக்கத்தில் ” எதுவும் தெரியாமல் இந்த இருவரையும் கேலி செய்யப்பவர்களுக்கு நான் சொல்ல வேண்டியது இதுதான்…
நாங்கள் 9 – 10 மாதங்கள் கருப்பையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்..ஆனால் 7 மாதங்களுக்குள் ஏராளமான குழந்தைகள் பிறக்கிறார்கள்..
இந்த சகோதரி மற்றும் சகோதரர் இருவரும் 7 மாதங்களில் பிறந்தவர்கள் .. அதனால்தான் இவர்கள் மிகவும் சிறியவர்களாக தெரிகின்றார்கள் ….
இந்த சகோதரருக்கு 28 வயது என்றும் இந்த சகோதரிக்கு 27 வயது என்றும் கூறுகிறார்கள். எனவே மற்றவர்களின் உணர்வுகளை மதித்து முகப்புத்தகத்தில் பதிவுகளை இடுவோம்.
அது மட்டும் இன்றி ஒருவரை பற்றி தெரியாமல் கேலி செய்வதும் எமது தவறு : தவறுக்கு மனம் வருந்தியவனாக உங்கள் –
நினைச்சா கவலை Admin 🙏.” என்று இம் மாதம் 20 ஆம் திகதி (20.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த தகவல் பலராலும் பகிரப்பட்டு வந்துள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த புகைப்படத்திலிருந்த Watermark உதவியுடன் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பேஸ்புக் பக்கத்தில் நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த புகைப்பட தொகுப்பிற்கு கீழ் பதியப்பட்டிருந்த கமெண்டுக்களை நாம் ஆய்வு செய்த வேளையில் Buddika Mahesh Keerthirathna என்பவரால் இவ்வாறான ஒரு பதிவு பதிவிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
” நண்பர்களே நீங்கள் share செய்கின்ற இந்த புகைப்படங்களை நீக்குங்கள். என்னுடைய புகைப்படத்திற்கு நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யுங்கள் எனது மனைவியின் புகைப்படத்திற்கு எதும் பண்ணாதீர்கள்.நான் நீங்கள் சொல்வதை போன்று குறை மாதத்தில் பிறந்தவன் அல்ல.எனக்கு பணம் மற்றும் செல்வதற்கு வாகனமும் உண்டு.எனக்கு வயது 22. நீங்கள் edit செய்த புகைப்படங்களை நீக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன். ‘
நாம் குறித்த கமெண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பேஸ்புக் கணக்கினை ஆய்விற்கு உட்படுத்தினோம்.
குறித்த பேஸ்புக் கணக்கானது புகைப்படத்தில் உள்ள மணமகன் உடையது என்பது உறுதியானது.
நாம் மேலும் இதனை உறுதி செய்வதற்காக புகைப்படக்கலைஞரை தொடர்பு கொண்டு வினவிய போது, மணமகனுக்கு 20 வயதும் மணமகளுக்கு 18 வயதும் என தெரிவித்தார்.
மேலும் இது முறையாக நடந்த திருமண நிகழ்வு என்றும் எமக்கு தெரிவித்தார்.
நாம் மேற்கொண்ட தேடுதலில் அடிப்படையில் பேஸ்புக்கில் வைரலான குறித்த புகைப்படத்தில் இருந்த மணமகனுக்கு வயது 20 என்று உறுதியானது. இதற்கமைய இவர் குறை மாதத்தில் பிறந்த குழுந்தை என போலியான தகவல் பேஸ்புக்கில் பகிரப்படுவது உறுதியாகியுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:குறைமாதத்தில் பிறந்த மணமகனின் திருமணப் புகைப்படம்; உண்மை என்ன?
Fact Check By: Nelson ManiResult: False