
INTRO :
200 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் அபூர்வ ஜோதி என ஒரு புகைப்படம் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

நல்லூர் கந்தன் தரிசனம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இந்த கோயில் 200 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் அபூர்வ ஜோதி உடனே ஷேர் செய்யுங்கள் உங்கள் கஷ்டங்கள் தீர்ந்து நல்ல செய்தி உடனே கிட்டும் ” என கடந்த மாதம் 12 ஆம் திகதி (12.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி நாம் குறித்த புகைப்படத்தினை தேடுதலுக்கு உட்படுத்தினோம். அப்பொழுது குறித்த புகைப்படம் ஒரு சுற்றுலா தளத்தில் Phanom Rung Historical Park என்ற தலைப்பிட்டு பகிரப்பட்டுள்ளமை எமக்கு கிடைக்கப்பட்டது.
குறித்த சுற்றுலா தளத்தில் தரப்பட்டுள்ள தகவலுக்கு அமைய Phanom Rung கோயில் தாய்லாந்து நாட்டில் அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இணையத்தில் பகிரப்படும் புகைப்படத்தினையும் Phanom Rung கோயில் புகைப்படத்தினை நாம் ஆய்வு செய்த போது குறித்த இரு படங்களும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகின்றது.

மேலும் நாம் மேற்கொண்ட தேடுதல் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி (04.04.2017) சூரிய கதிர்வீச்சு குறித்த ஆலயத்தின் 15 கதவுகளை கடந்து சென்ற நிகழ்வு தொடர்பாக ஒரு செய்தி இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
இந்த நிகழ்வு ஒரு வருடத்தில் சில நாட்கள் இடம்பெறும் என தெரிவித்துள்ளனர்.

குறித்த தகவலுக்கு அமைய 200 வருடங்களுக்கு ஒரு முறை தோண்டும் ஜோதி என தெரிவித்துள்ளமை போலியான தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.