
INTRO :
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாக பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைக்கின்றது.
இந்நிலையில் 101 வருடங்களுக்கு முன்பு உலகம் இது போன்ற ஓர் நிலையினை சந்தித்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என 10 புகைப்படங்கள் அடங்கிய ஒரு புகைப்படத்தொகுப்பு பகிரப்படுவதை நாம் அவதானித்தோம்.
இதன் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
அழகோவியம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” 101 ஆண்டுகளுக்கு முன் இதே உலகம் இதே நிலை இதே துயரம்.அதற்கு இந்த புகைப்படங்கள் சாட்சி.அதனால் இதுவும் கடந்து போகும் நம்புவோம்” என இம் மாதம் 26 ஆம் திகதி (26.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
எமது குழுவினர் குறித்த புகைப்படத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு புகைப்படத்தினையும் Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தினோம்.
முதலாவது புகைப்படம்
குறித்த புகைப்படமானது 1953 ஆம் ஆண்டு பிலடெல்பியா நாட்டில் காற்று மாசடைவினால் மக்கள் அவதியுற்ற வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
இரண்டாவது புகைப்படம்

1913 ஆம் ஆண்டு காலத்தில் பெண்களின் உடை அலங்காரம் என்ற தலைப்பில் குறித்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது புகைப்படம்
குறித்த புகைப்படம் 1941 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 9 ஆம் திகதி (09.06.1941) கிங்ஸ்டன் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட வாயு பரிசோதனை மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
நான்காவது புகைப்படம்

இந்த புகைப்படமானது மொண்ரியோ, கனடாவில் 1939 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பனிபுயலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள குறித்த முகக்கவசம் அணியப்பட்டுள்ளது.
மேலும் குறித்த புகைப்படத்தொகுப்பில் மீதமுள்ள 6 புகைப்படங்களும் 101 வருடங்களுக்கு முன் உலகம் எதிர்கொண்ட ஸ்பானிஷ் காய்ச்சல் (spanish flu) காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும்.
அதற்கான ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
நாம் மேற்கொண்ட தேடலுக்கு 101 வருடங்களுக்கு முன்பு உலகம் இதே நிலை என பகிரப்படும் புகைப்படங்களில் சில புகைப்படங்கள் வெவ்வேறு சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:101 வருடங்களுக்கு முன்பு உலகம் இதே நிலை என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: Partly False