
INTRO :
இந்தோனேசியா காடுகளில் வளரும் 100 அடி உயரமான வாழை மரங்கள் என ஒரு பதிவு பகிரப்படுகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Panipulam Seythikal என்ற பேஸ்புக் கணக்கில் ” இந்தோனேசியா காடுகளில் வளரும் 100 அடி உயரமான வாழை மரங்கள்.!!” என இம் மாதம் 21 ஆம் திகதி (21.01.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
முதலில் நாம் இது குறித்து உலக சாதனைகள் பதிவிடும் guinnessworldrecords இணையத்தில் ஆய்வினை மேற்கொண்டோம். அதில், எமக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களுக்கு அமைய இதுவரையில் உலக சாதனை இணையத்தில் பதிவாகியுள்ள வாழை மரத்தின் உயரம் 66 அடிகள் ஆகும்.

guinnessworldrecords.com | Archived link
வாழை மரத்தின் ஒரு வகையான Musa ingens என்ற மரம் வகை எங்குள்ளது என்று நாம் ஆய்வினை மேற்கொண்டோம் அதற்கமைய இது இந்தோனேசிய பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டது.

மேலும் யூடியுப் தளத்தில் குறித்த வாழை மரம் தொடர்பில் வெளியிட்டிருந்த காணொளியும் கிடைக்கப்பெற்றது.
நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய உலக சாதனையாக பதியப்பட்டுள்ள வாழை மரத்தின் உயரம் 66 அடியாக உள்ள நிலையில் அதனை 100 அடி மரம் என பகிர்ந்துள்ளமை கண்டறியப்பட்டடுள்ளது. மேலும், இத்தகைய உயரமான வாழை மரங்கள் இந்தோனேசிய பகுதிகளில் பயிரிடப்படுவது வழக்கம்தான் என்றும் உறுதியாகிறது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இந்தோனேசியா காடுகளில் வளரும் 100 அடி உயரமான வாழை மரங்கள்; உண்மை என்ன?
Fact Check By: Nelson ManiResult: Missing Context