
INTRO :
இரத்த புற்றுநோயை முழுவதுமான குணமாக்குவதற்கு இலவசமாக மருந்து வழங்கப்படுகின்றது என இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Saams Deen என்ற பேஸ்புக் கணக்கில் ” தமிழர்கள் திருநாளான அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்…
தயவு செய்து பகிரவும் நண்பர்களே:-
Plea se share
இதுவரை கொடிய நோயாக இருந்த
இரத்த புற்றுநோயை(Bloo d Cancer)-
யை முழுவதுமாக குணமாக்குவதற்கு
மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது
அந்த மருந்தின் பெயர் “Imitinef
Mercilet” ஆகும்.
இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள
கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக
வழங்கப்படுகிறது …..
அணுக வேண்டிய முகவரி :—-
Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.
PHONE:———
044 -24910754
044 -24911526
044 -22350241
நண்பர்களே நம்மால் ஒருவர் பயன்
அடைந்தாலும் அந்த
இறைவனுக்கு நன்றி சொல்ல
கடமை படுவோம்……..
Please share as much guys: –
Far from the deadly disease of
blood cancer (Blood Cancer) –
found the drug was found to
completely recover from
scratch …..
The name of the drug “Imitinef
Mercilet” is.
The Cancer Research Center of the
drug in our Chennai is provided
free of charge …..
Contact Address: ——
Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.
PHONE: ——–—
044 -24910754
044 -24911526
044 -22350241
If we were to use one of those
guys will get duty to thank
God ……..” என கடந்த மாதம் 14 ஆம் திகதி (14.01.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த தகவல் பலராலும் பல வருடங்களாக இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
எமது இந்திய தமிழ் பிரிவினர் இது குறித்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தொடர்பு கொண்டு வினவியுள்ளனர்.
குறித்த தொடர்பாடலில் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள Imitinef Mercilet என்ற மருத்து ரத்த புற்றுநோய்க்கு பயன்படக் கூடியதுதான். ஆனால், இந்த மருந்தால் எல்லாவகை ரத்த புற்றுநோயையும் குணப்படுத்த முடியாது.
மேலும், ரத்த புற்றுநோயை குணமாக்கும் ஒரே மருந்து என்று உலகில் எதுவும் இல்லை. சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாக இந்த வதந்தி பரவி வருகிறது.
இதை நம்பி தினமும் ஏராளமான போன் கால் மட்டுமின்றி, நேரிலேயே பலரும் வருகின்றனர். அவர்களிடம் அந்த தகவல் தவறானது. அப்படி சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என்றபோது அவர்கள் அடையும் வேதனை நமக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
நாம் அதை தொடர்ந்து மேற்கொண்ட தேடலின் போது 2014 ஆம் ஆண்டிலேயே விகடனில் ஒரு கட்டுரை வெளியானது தெரிந்தது. அதில், பிளட் கேன்சருக்கு இலவச மருந்து – வாட்ஸ்அப்பில் ரவுண்ட் அடிக்கும் விபரீத வதந்தி என்று தலைப்பிட்டிருந்தமை காணக் கிடைத்தது.
குறித்த கட்டுரையில் போலியான தகவல்களை பரப்புவதற்கு துணைபோகாதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மருந்து ‘chronic myeloid leukemia’(CML) என்ற ஒரு வகை ரத்த புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுகிறது என்றும், இது இந்தியா முழுக்க உள்ள எல்லா புற்றுநோய் சிகிச்சை மையங்களிலும் கிடைக்கும் என ஒரு ஆய்வறிக்கையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
avensonline.org | Archived Link
எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எமது தேடலுக்கு அமைய, ரத்த புற்றுநோய்க்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மட்டுமே மருந்து வழங்கப்படுகிறது, அதுவும் இலவசமாக வழங்கப்படுகிறது எனும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இரத்த புற்றுநோய்க்கு இலவசமாக மருந்து வழங்கப்படுகிறதா?
Fact Check By: Nelson ManiResult: False