
இந்திய தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் 4 தொகுப்பாளராக சூர்யா செயல்படவுள்ளதாகவும், கமல் சிறையில் சரணடைந்ததாக வெளியான செய்தி தொடர்பில் உண்மையினை கண்டறிய ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link | News Link | Archive Link
Sooriyan Fm பேஸ்புக் பக்கத்தில், “ Bigg Boss -04இல் சூர்யா ; சிறையில் சரணடைந்த கமல் !! ” என்று குறிப்பிட்டுள்ளது. புகைப்படத்தில் ”Bigg Boss -04இல் சூர்யா – சிறையில் கமல் ” என்று இருந்தது. கோசிப் சூரியன் எப்எம் செய்தி லிங்கை இதனுடன் வெளியிட்டிருந்தனர். குறித்த பதிவு கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி (21.09.2019) குறித்த பதிவை பதிவேற்றம் செய்துள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
தற்போது விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 3 இனை ஒளிபரப்பு செய்து வருகின்றது. இனி பிக்பாஸ் சீசன் 4 அடுத்த வருடம் ஜுன் மாதமே ஆரம்பமாகும். அடுத்த வருடத்தில் கமலஹாசன் சிறையில் சரணடைந்தாரா..? குறித்த சந்தேகம் வலுவாகியது.
ஆகவே, குறித்த செய்தியை முழுமையாக படித்தோம்.

அதில் தலைப்பில் சொன்னது போல் செய்தியில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாறாக இந்தியன் 2 படைப்பிடிப்பு காரணமாக சில காட்சிகள் சிறையில் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு “ சிறையில் சரணடைந்ததாக தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.”
எனினும் குறித்த படப்பிடிப்பு 15 நாட்களே இடம்பெறவுள்ள நிலையில் எவ்வாறு அடுத்த வருடம் இடம்பெறவுள்ள பிக்பாஸ் சீசன் 4 இல் கமல் தொகுப்பாளராக கடமையாற்றாது போவார் என்ற கேள்வியும் எழுந்தது.
அதற்கு பதிலாக செய்தியில் இறுதியில் “கமல்ஹாசன் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த வருடம் பிக்பாஸ் 4-வது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் விரும்பவில்லை என்றும் அவருக்கு பதிலாக சூர்யா, மாதவன், சிம்பு ஆகியோரில் ஒருவர் தொகுத்து வழங்குவார் என்றும் வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனை நிகழ்ச்சி குழுவினர் இதனையும் மறுத்துள்ளனர். ” என்று அவர்களே தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 4 இன் தொகுப்பாளர் தொடர்பில் மேலும் ஆய்வினை மேற்கொண்ட போது, கமலே அடுத்த பிக்பாஸ் சீசன் 4 யையும் தொகுத்து வழங்குவார் என்று விஜய் டிவி நிறுவனமே அறிவித்துள்ளமை பற்றி பல இணையத்தள செய்திகள் வெளியிட்டிருந்தது.


சிறையில் சரணடைந்தாரா கமல்
குறித்த செய்தி தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று சிறையில் கமல் சரணடைந்தாரா என்று நாம் ஆய்வினை மேற்கொண்ட வேளையில், இந்தியன் 2 படத்திற்கான ஷுட்டிங்காக ஆந்திரா சென்றுள்ள படக்குழு சில காட்சிகளை அங்குள்ள ராஜமுந்திரி சிறையில் படமாக்குகின்றனர். இதற்காக விசேஷ அனுமதி பெற்று கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் சிறைக்கு சென்றனர்.

சிறைக்குள் 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிகிறது. சேனாதிபதியாக நடிக்கும் கமல்ஹாசன் சிறைக்குள் இருப்பது போன்ற காட்சியை எடுக்கின்றனர். இது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக இணையத்தளத்தில் வெளியான செய்திகள்


இதன் மூலம், Bigg Boss -04இல் சூர்யா ; சிறையில் சரணடைந்தார் கமல் என்று தவறாக தலைப்பிட்டுள்ளது புரிந்தது. நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், தவறான தலைப்பு காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மேற்கண்ட பேஸ்புக் பதிவு மற்றும் செய்தியின் தலைப்பில் தவறு உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Title:Bigg Boss -04இல் சூர்யா ; சிறையில் சரணடைந்தாரா கமல் ..?
Fact Check By: Nelson ManiResult: False Headline
