
இலங்கையில் 8 ஆவது ஜனாதிபதி தெரிவு செய்வதற்காக வருகின்ற மாதம் 16 ஆம் திகதி (16.11.2019) அன்று ஜனாதிபதி தேர்தல் நடப்பெறவுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச அவர்களுக்கு அதுரலிய ரத்ன தேரர் ஆதரவு வழங்குவதாக பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன.
குறித்த செய்தி தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Haala Media என்ற பேஸ்புக் பக்கத்தில் “சிங்கள பெளத்த ராஜியத்தை கட்டியெழுப்ப சஜித் பிரேமதாசாவே சரியான தெரிவு!
அத்துரலிய ரத்தின தேரர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்க முடிவு.
சிங்கள பெளத்த ராஜியத்தை கட்டியெளுப்ப சஜித் பிரேமதாசாவே சரியான தெரிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று சம்பிக்க ராஜித்த சேனா ரத்ன அவர்களை சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடதக்கது இவர் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியபட்டியல் உருப்பினரும் சம்பிக்க அவர்களின் யாதிக்க ஹெல உரிமைய கட்சியின் அங்கத்தவருமாவார்.” என்று கடந்த மாதம் 27 ஆம் திகதி (27.09.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த பேஸ்புக் பதிவிலுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவிக்க அவர்கள் ஐக்கிய தேசிய கட்சி ஐனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவது, குறித்து செய்திகள் வெளியாகியிருந்தது.

விடிவெள்ளி இணையத்தளம் கடந்த மாதம் 16 ஆம் திகதி (16.09.2019) அன்று வெளியிட்டிருந்த செய்தியில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவிக்க ஆதரவு வழங்குவதை உறுதிசெய்துள்ளது.
எனினும் குறித்த செய்தியில் அதுரலிய ரத்ன தேரர் தொடர்பில் எவ்வித பதிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு அறிக்கை

வீரகேசரி நாளிதழ் (27.09.2019)
மேலும், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை தீர்மானிக்கும் கலந்துரையாடல் வெற்றி பெற்ற பிறகு அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் பங்காளிக் கட்சி தலைவர்கள் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தின் அமைச்சர் சம்பிக்க ரணவிக்க இருப்பது படத்தில் காணலாம்.

அதுரலிய ரத்ன தேரர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோட்டபாய ராஜபக்ஷவிற்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். முழு அறிக்கை
கடந்த 5 ஆம் திகதி (05.10.2019) அன்று இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கருத்து வெளியிட்ட அதுரலிய ரத்ன தேரர் தமது ஆதரவு குறித்தும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த காணொளி பதிவு
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதுரலிய ரத்ன தேரர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக வெளியான செய்தியில் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
