
அமேசன் காட்டின் நடுவில் அல்லாஹ் என்ற வார்த்தை வடிவில் நீர் வீழ்ச்சி உள்ளதாக பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

பரபரப்பு நீயூஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் “அமேசான் காட்டின் நடுவில் *அல்லாஹ் என்ற வார்த்தை வடிவில்* நீர் வீழ்ச்சி ஒன்று இரகசியமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனைக் காண்பவர்கள் இஸ்லாத்தை தழுவுகின்றனர் என்ற காரணத்தினால் , பிரேசில் அரசு அதைப் போய் பார்ப்பதை தடை செய்து வைத்துள்ளது . அல்லாஹு அக்பர்” என்று கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.09.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவோடு ஒரு புகைப்படமும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த பதிப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தினை நாம் ஆய்வு செய்ய Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடிய வேளையில்,

1 ஆம் இலக்கம் இடப்பட்டுள்ள இணையத்தளத்திற்கு சென்றவேளையில்,

குறித்த இணையத்தளத்தில் அப்புகைப்படமானது வரையப்பட்ட ஒரு சித்திரம் என விபரிக்கப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.
மேலும் குறித்த பதிவானது கடந்த 2014 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 10 ஆம் திகதி (10.07.2014) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.முழு அறிக்கை
மேலும் 2 ஆவது இலக்கம் இடப்பட்டுள்ள இணையத்தளத்திற்கு சென்றவேளையில்,

குறித்த இணையத்தளமும் இது வரையப்பட்ட ஓவியம் என குறிப்பிட்டுள்ளது. இப்பதிவானது 2012 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முழு அறிக்கை
மேலும் நாம் Google Image இல் அல்லாஹ் என்ற வார்த்தை வடிவில் நீர்வீழ்ச்சி என்று தேடிய போது பேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படம் கிடைக்கவில்லை.

மேலும், பேஸ்புக் பக்கத்தில் பகிரப்படும் குறித்த புகைப்படத்தினுடன் உண்மையில் கேமிராவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை ஒப்பிட்டு பார்க்கும் போது, இது ஒரு பெயின்டிங்; உண்மையான நீர்வீழ்ச்சி கிடையாது என தெரியவந்தது.

முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அடிப்படையில் பேஸ்புக் பக்கத்தில் அமேசன் காட்டின் நடுவில் அல்லாஹ் என்ற வார்த்தை வடிவில் நீர் வீழ்ச்சி என பகிரப்படும் புகைப்படம் போலி என முடிவு செய்யப்படுகிறது.

Title:அமேசன் நடுவில் அல்லாஹ் என்ற வார்த்தை வடிவில் நீர் வீழ்ச்சி?
Fact Check By: Nelson ManiResult: False
