
முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச அவர்களின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச இஸ்லாம் மதத்தினை தழுவியதாக பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம்.
தகவலின் விவரம்:

Hussain Jasmeen என்ற பேஸ்புக் பக்கத்தில் “இன்று வெள்ளிக் கிழமை நல்ல நாள் என்பதால் இஸ்லாத்தை தழுவினார்.. முன்னாள் ஜனாதிபதி
#மஹிந்த #ராஜபக்ச வின் மனைவி #சிறாந்தி #ராஜபக்ச !!
“அல்ஹம்துலில்லாஹ”” என்று கடந்த வெள்ளிக்கிழமை (25.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் குறித்த பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த Comments ஐ நாம் தேடுதலுக்கு உட்படுத்தினோம்.

அதில் பலர் குறித்த புகைப்படம் போலியானதை உறுதி செய்வதற்கு எதுவாக பலர் கேள்வி கேட்டிருந்ததும் காணக்கிடைத்தது.
குறித்த புகைப்படத்தினை நாம் Google reverse image tool ஐ பயன்படுத்தி தேடுதலுக்கு உட்படுத்தினோம், அதில் எவ்விதமான தகவல்களும் கிடைக்காமையினால்,
நாம் ஷிராந்தி ராஜபக்ச அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் தேடுதலினை மேற்கொண்டோம்,
அவரின் பெயரில் இரண்டு முகநூல் பக்கங்கள் காணப்பட்டது. அதில் அவரின் இரு பக்கங்களிலும் குறித்த நிகழ்வின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அதில் குறித்த புகைப்படமானது 2018 ஜூலை மாதம் 27 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டதாக காணப்பட்டது.

கடந்த வருடம் இடம் பெற்ற ரம்ஷான் பண்டிகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என குறித்த இரு பேஸ்புக் பக்கத்திலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இஸ்லாத்தை தழுவினார் ஷிராந்தி ராஜபக்ச என வெளியான புகைப்படம் தவறான ஒன்றாகும். அது 2018 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.