
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஆனால் மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன.
குறித்த சம்பவத்தின் போது ஆள்துளை கிணற்றில் சிக்கிய சுஜித்தின் பழைய காணொளி மற்றும் புகைப்படங்கள் என ஒரு குழந்தையின் புகைப்படம் மற்றும் காணொளிகள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம்.
தகவலின் விவரம்:
ECHO Tamil News என்ற பேஸ்புக் பக்கத்தில் “இவன்தான் அந்த குட்டித் தம்பி சுஜித்.உன்னை பார்க்காம எங்களுக்கு யாருக்கும் தீபாவளியே இல்லடா..கண்ணா சீக்கிரம் மேலே வாடா.” என்று கடந்த ஞாயிறு கிழமை (27.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள TikTok செயளியை பரிசோதனைக்கு உட்படுத்தினோம். குறித்த செயளியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த வீடியோ பதிவிற்கு பலரும் comment இல் இது தவறான வீடியோ எனவும், தயவு செய்து Delete பண்ணவும் என பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை காணக்கிடைத்தது.
மேலும் குறித்த புகைப்படம், போலியானது என பல இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Polimer News
Thanthi Tv
வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தை சேர்ந்த முனிவேல், சுகன்யாவின் 2 வயது மகனான நித்திஷ் படங்களே சுஜித் என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
1. உயிரிழந்த சுஜித் அவரின் தாயுடன் இருக்கும் புகைப்பட
2. சுஜித் என கூறி இணையத்தில் பரப்பப்படும் நித்திஷின் புகைப்படம்
3. நித்திஷ் தன் தாயுடன் இருக்கும் புகைப்படம்
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சுஜித் வில்சன் என இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படம் நித்திஷ் என்பவராகும்