
பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்த ஞானசார தேரர் ”கோட்டபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்காவிட்டால் தமிழர்களும், முஸ்லிம்களும் உடமைகளுடன் வெளியேற வேண்டி ஏற்படும்” என்று தெரிவித்ததாக ஒரு பதிவு பேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.10.2019) நடந்த ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Navaa Yugha என்ற பேஸ்புக் கணக்கில் “Omg… Great news.. UK or US or Australia? Actually I m ready..!
🙊🙈🙊🙊🙈 “ என்று இம்மாதம் முதலாம் திகதி (01.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் அதில் பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்த ஞானசார தேரர் புகைப்படத்துடன் ” கோட்டபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்காவிட்டால் தமிழர்களும், முஸ்லிம்களும் உடமைகளுடன் வெளியேற வேண்டி ஏற்படும்” என்ற வசனமும் பொறிக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்றும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு மேற்கொண்ட ஆய்வில்,
குறித்த செய்தி தொடர்பாக Colombo Today இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்த ஞானசார தேரர் குறித்தவாறு எவ்வித அறிக்கையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளதோடு,குறித்த செய்தியில் அடிப்படையில் பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்த ஞானசார தேரர் கடந்த மாதம் 30 ஆம் திகதி எவ்வித ஊடக சந்திப்பினையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாம் பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்த ஞானசார தேரர் ஊடக அமைப்பினை தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த செய்தி போலியானது என தெரிவித்திருந்தனர்.
குறித்த செய்தி போலியானது என அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்த ஞானசார தேரர் தெரிவித்ததாக இணையத்தில் பரவும் செய்தி போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

Title:தமிழர்களும், முஸ்லிம்களும் உடமைகளுடன் வெளியேற வேண்டும் என ஞானசார தேரர் சொன்னாரா?
Fact Check By: Nelson ManiResult: False