
உங்களுக்குத் தெரியுமா என்று தலைப்பிட்டு தேள் படத்துடன் கூடிய புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
அதில், “ஒரு மனிதனை தேள் கடித்து பின் வைத்தியம் பார்த்துவிட்டால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் இதய அறுவைசிகிச்சையோ, ஆஞ்சியோபிளாஸ்டோ தேவையில்லை. தேள் கடித்தவருக்கு மார்க்கட்டீன் என்ற விஷம் இதய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறது. இதைப்போல், தேனீ கொட்டியவர்களுக்கு ரத்த கொதிப்பு வராது, செய்யான் கடித்தவர்களுக்கு சர்க்கரை நோய் வராது, சங்குழவி கடித்தவருக்கு கேன்சர் வராது. இவைகளின் விஷம்தான் ஆங்கில மருத்துவத்தில் தடுப்பு மருந்தாக பயன்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Ariyarethnam Selvam என்ற பேஸ்புக் கணக்கில் ” ஒரு மனிதனை தேள் கடித்து பின் வைத்தியம் பார்த்துவிட்டால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் இதய அறுவைசிகிச்சையோ, ஆஞ்சியோபிளாஸ்டோ தேவையில்லை. தேள் கடித்தவருக்கு மார்க்கட்டீன் என்ற விஷம் இதய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறது. இதைப்போல், தேனீ கொட்டியவர்களுக்கு ரத்த கொதிப்பு வராது, செய்யான் கடித்தவர்களுக்கு சர்க்கரை நோய் வராது, சங்குழவி கடித்தவருக்கு கேன்சர் வராது. இவைகளின் விஷம்தான் ஆங்கில மருத்துவத்தில் தடுப்பு மருந்தாக பயன்படுகிறது” என்று இம்மாதம் 11 ஆம் திகதி (11.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் குறித்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்ட மார்க்கட்டீன் என்ற விஷம் தொடர்பாக கூகுளினை பயன்படுத்தி தேடலுக்கு உட்படுத்தினோம்.
அத்தேடலின் போது எவ்விதமான மருத்தும் அதில் கிடைக்கவில்லை. நாம் மேலும் மேற்கொண்ட சோதனையின் போது மார்கடாக்சின் (margatoxin) என்ற பெயரில் ஒரு மருந்து 2010 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனை நிலையில் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.


இது குறித்து எமது இந்திய தமிழ் பிரிவு மேற்கொண்ட சோதனையில் இது வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. முழு அறிக்கை
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், தேள் கொட்டினால் இதய நோய் வராது என கூறப்பட்ட தகவல் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.