
அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம், Youtube channel போன்றவற்றில் உலவினால் ரூபாய் 5000/- தண்டப்பணம் விதிக்கப்படும் என தகவல் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியிருந்தது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Try Practice Try Practice என்ற பேஸ்புக் கணக்கில் ”இன்று முதல் அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம் , You tube chanell போன்றவற்றில் வலம்வந்தால் ரூபாய் 5000/- தண்டப்பணம் விதிக்கப்படும்.” என்று கடந்த மாதம் 19 ஆம் திகதி (19.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் நாம் “அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம் பாவித்தால் ரூபாய் 5000/- தண்டப்பணம் விதிக்கப்படும் ” என்று செய்தி வெளியாகியுள்ளதா என்று கூகுளில் தேடினோம்.
அவ்வாறான செய்தி எவ்வித செய்தி தளங்களிலும் வெளியாகி இருக்கவில்லை.

மேலும் இதன் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் ஜனாதிபதி ஊடக பிரிவில் சமூகவலைத்தளங்களுக்கு பொறுப்பானவர்களை தொடர்புகொண்டு வினவிய போது, குறித்த செய்தி போலியானது என்று தெரிவித்தனர்.
அத்தோடு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ ஊடக அறிக்கையில் வெளியாகும் செய்திகள் மாத்திரமே ஜனாதிபதியால் கூறப்பட்டவை என்றும் தெரிவித்திருந்தார்.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அரச உத்தியோகத்தர்கள் கடிமை நேரத்தில் சமூக வலைத்தளம் பாவித்தால் தண்டப்பணம் என கூறப்பட்ட தகவல் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Title:அரச உத்தியோகஸ்தர்கள் கடமை நேரத்தில் சமூக வலைத்தளம் பாவித்தால் தண்டப்பணமா?
Fact Check By: Nelson ManiResult: False