கொரோனாவை கொண்டு வந்தது முஸ்லீம்கள் என சஜித் தெரிவித்தது போன்று ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “
இனவாதிகள் இவ்வாறு தான் பேசுவார்கள் நாம்தான் புத்தியவுடன் நடந்து கொள்ள வேண்டும் “ என இம் மாதம் 04 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (04.09.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
<iframe frameBorder=’0′ width=’640′ height=’360′ webkitallowfullscreen mozallowfullscreen allowfullscreen src=”https://www.awesomescreenshot.com/embed?id=31266547&shareKey=020888926296f61510604231dbee7425″></iframe>
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைக்கின்றது.
அதற்கமைய பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச கொரோனாவை இந்த நாட்டில் பரப்புகின்றவர்கள் முஸ்லீம்கள் என தெரவித்ததாக ஒரு வீடியோ பகிரப்படுவது காணக்கிடைத்தது.
நாம் குறித்த புகைப்படத்தின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த தேடலின் போது கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொரோனா தோற்றால் மரணித்த முஸ்லிம் மக்களை எரிப்பதற்கு எதிராக குறித்த உரையாடல் அமைந்திருந்தமை எம்மால் அவதானிக்க கிடைத்தது.
<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsajithpremadasa%2Fvideos%2F633420047326717%2F&show_text=false&width=560&t=0″ width=”560″ height=”314″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>
நாம் குறித்த உரையாடலை ஆய்வு செய்தபோது, முஸ்லீம் மக்களுக்கு எதிராக அநீதி நடந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை காணக்கிடைத்தது.
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/yayAhG6L2xs?si=rZhagen890fRZwyp” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பாராளுமன்றத்தில் கொரோனாவை கொண்டு வந்தது முஸ்லீம்கள் என சஜித் தெரிவித்ததாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

