பயங்கரவாதத் தடுப்பு பிரிவால் பாக்கியச்செல்வம் அரியநேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்ற செய்தி வெளியாகியிருந்தமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்ப்பாளராக போட்டியிட்ட அரியநேந்திரன், பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். என்ற செய்தி, Tamil Gurdian இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இது உண்மையென எண்ணி பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் குறித்த தகவல் தொடர்பாக பிரதான ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்துள்ளதா என நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, அவ்வாறான எவ்விதமான செய்தியும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
இந்த விடயத்தின்உண்மைத்தன்மையை ஆராயும் நோக்கில் , ராஜ்குமார் ராஜீவ்காந்தியை உரை ஆராய்ந்த போது, அரியேந்திரனுக்கு விடுக்கப்பட்ட விசாரணை அழைப்புக்குறித்து அவரால் எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. குறித்த உரை பின்வருமாறு அமைந்திருந்தது
“ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவோம் என்று உறுதியளித்திருந்தார்கள் இன்று இவர்கள் அட்சிக்கு வந்து சில நாட்களே ஆகியுள்ள சூழ்நிலையில் இன்று சிலருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிடமிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுகொண்டிருக்கின்றன. நண்பர் ஒருவர் இந்தமுறை தமிழ் பொதுவேட்பாளராக இருந்த அரியநேத்திரனுக்கு சமூகவலைத்தளத்தில் பணம் செலுத்தி விளம்பரங்கள் செய்துகொண்டிருந்திருக்கிறார். அவ்வாறு பணம் செலுத்தி விளம்பரம் செய்துகொண்டிருந்தது ஒரு தீவிரவாதச் குற்றமென வரையறை செய்வதுபோல பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அவருக்கு கடிதம் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இந்த விசாரணை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் இடம்பெற்றுள்ளது. சர்வதேசத்திடமிருந்து எப்படி பணம் வந்தது? எங்கிருந்து பணம் வந்தது? என்கிற தேவையற்ற கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டுள்ளது. என்றே ராஜ்குமார் ரஜீவ்காந் தனது உரையில் கூறியிருக்கிறார்.
இந்த விடயம் தொடர்பாக பாக்கியச் செல்வம் அரியநேந்திரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது , பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் தான் அழைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
அத்துடன் கட்சியின் நின்றிருந்த ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். என்பதை உறுதிப்படுத்தினார் .மேலும் இந்த விடயம் பற்றிய மறுப்பை ராஜ்குமார் ரஜவ்காந் வெளிப்படுத்தியிருந்தார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கைக்கு அமைய, அரியநேந்திரன் பயங்கரவாதத் தடுப்புபிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பு என பகிரப்படும் தகவலில் உண்மைதன்மை இல்லை என கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.