பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 225 உறுப்பினர்களுக்காக இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 8888 பேர் போட்டியிடுகின்றனர். நீங்கள் வழங்கும் வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்திற்கு எவ்வாறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர் என்பது தொடர்பில் விரிவாக பார்க்கலாம்.
முதலில் நீங்கள் வழங்கிய வாக்குகளில் நிராகரிக்கப்பட்ட அல்லது செல்லுபடியற்ற வாக்குகள் நீக்கப்படும்.
செல்லுபடியற்ற வாக்குகள் நீக்கப்பட்டதன் பின்னர் எஞ்சிய வாக்குகள் கிடைக்கப்பெற்ற வாக்கு வீதம் என அழைக்கப்படும். குறித்த வாக்குகளே பாராளுமன்ற உறுப்பினர்களின் தெரிவிற்காக கணக்கிடப்படும் வாக்குகள் ஆகும்
உதாரணமாக – ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் 10 ஆசனங்கள் என எடுத்துக் கொள்வோம்.
அந்த ஆசனங்களுக்காக மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 120, அவற்றில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 20, இப்போது மொத்தம் பதிவான வாக்குகளிலிருந்து நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை கழித்தால், இறுதியாக வரும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கையே கிடைக்கப்பெற்ற வாக்குகளாக கருதப்படும்.
எனவே மேற்குறிப்பிட்ட உதாரணத்தின்படி மொத்தமாக கிடைக்கப்பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 100 என ஏற்றுக்கொள்ளப்படும்.
நாம் உதாரணத்திற்கு இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் 7 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன என கொள்வோம்.
அந்த கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள் பின்வருமாறு
A கட்சி – 36
B கட்சி – 30
C கட்சி – 16
D கட்சி – 08
E கட்சி – 04
F கட்சி – 03
G கட்சி – 03
இந்த கட்சிகளுக்கு கிடைத்த மொத்த வாக்குகளில் 5% கூட பெற்றுக்கொள்ள முடியாத கட்சிகள் முதலில் இந்த தேர்தலில் இருந்து நீக்கப்படும்.
உதாரணமாக – E,F,G கட்சிகள் 5% விட குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளன.
அதன்படி இந்த மூன்று கட்சிகளும் மொத்தமாக பெற்றுக்கொண்ட வாக்குகளின் கூட்டுத்தொகையானது, தேர்தலில் மொத்தமாக பதிவான வாக்குகளில் இருந்து கழிக்கப்படும்.
விரிவாக கூறுவதாயின் தேர்தலில் மொத்தமாக கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 100ஆக இருந்தால் அந்த எண்ணிக்கையில் இருந்து மேற்குறிப்பிட்ட 3 கட்சிகளும் பெற்றுக்கொண்ட வாக்குகளின் மொத்த எண்ணிகையான 10 கழிக்கப்பட்டு, வரும் மொத்த வாக்கு எண்ணிக்கையே பின்னர் கணக்கிடப்படும். அதற்கமைய எஞ்சிய வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 90 ஆகும்.
அடுத்த கட்டமானது அனைத்து மாவட்டங்களிலும் வெற்றி பெற்ற கட்சிக்கும் மேலதிக ஆசனமொன்று வழங்கப்படும். அதாவது மேலதிக உறுப்பினர் பதவியொன்று முதலில் வழங்கப்படும்.
நாம் முதலில் கூறியது போல, குறித்த மாவட்டத்திற்கு ஆசனம் இல்லையெனில் அந்த மாவட்டத்திற்கு 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி மாத்திரமே கிடைக்கும்.
குறித்த 10 ஆசனங்களில் மேற்குறிப்பிட்ட கட்சிகளில் ஒரு ஆசனம் A எனும் கட்சிக்கு கிடைக்கும். அதற்கமைய மேலும் 9 ஆசனங்கள் எஞ்சியிருக்கும்.
எஞ்சிய ஆசனங்கள் ஏனைய கட்சிகள் பெற்றுக்கொண்டு வாக்கு வீதங்களின் அடிப்படையில் பகிரப்படும்.
இங்கு கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மீதமுள்ள ஆசனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
அதாவது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு (ஆசனம்) பெறப்பட வேண்டிய குறைந்தபட்ச வாக்குகளின் எண்ணிக்கையை இங்கு பார்க்கப்படும்.
அதற்காக, மாவட்டத்தில் பெறப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுக்கப்படுகிறது.
அதாவது, நாம் மேற்குறிப்பிட்ட உதாரணத்திற்கமைய மொத்த 90 வாக்குகளின் எண்ணிக்கை மீதமுள்ள ஆசன எண்ணிக்கையால் பிரிக்கப்பட்டு, இடங்களின் எண்ணிக்கையால் வகுக்கப்படுகிறது. அதாவது, 90/9ஆல் பிரிக்கப்பட்டு வரும் மொத்த எண்ணிக்கை ஆகும்.
இந்த உதாரணத்தின்படி உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு குறைந்தபட்சம் பெற்றுக்கொள்ளக்கூடிய வாக்கு எண்ணிக்கை 10 ஆகும்.
இதன்படி பெற்றுக்கொள்ள வேண்டிய வாக்கு வீதத்தை விட 2 மடங்கு அதிக வாக்குகளை பெற்றிருப்பின் 2 ஆசனங்களும் மூன்று மடங்கு அதிகமாக பெற்றிருப்பின் 3 ஆசனங்களும் குறித்த கட்சிக்கு வழங்கப்படும். பெற்றுக்கொண்ட வாக்கு வீதத்திற்கமைய ஆசனங்கள் பகிரப்படும்.
முதலில் குறிப்பிட்ட உதாரணத்திற்கமைய, நாம் எவ்வாறு ஆசனங்கள் வழங்கப்படுகின்றன என்பது பற்றி அவதானிப்போம்.
(ஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தலின் மொத்த வாக்குகளின் வீதத்தால் பிரித்தால் வரும் எண்ணிக்கையே ஆசனங்களின் எண்ணிக்கை என்பதை நீங்கள் அறிவீர்கள்.)
அதன்படி A கட்சிக்கு 36 வாக்குகள் கிடைத்துள்ளன, மொத்தமாக கிடைத்துள்ள வாக்குவீதமான 10 ஆல் 36 ஐ பிரித்தால் அந்த கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைக்கின்றன. அதன்படி அந்த கட்சிக்கு 6 வாக்குகள் எஞ்சியுள்ளன.
இவ்வாறே கட்சியொன்றுக்கு கிடைத்துள்ள ஆசனங்கள் மற்றும் எஞ்சிய வாக்குகள் கணிக்கப்படுகின்றன.
A கட்சி – 36 (36/10 – 3 எஞ்சிய வாக்குகள் 6)
B கட்சி – 30 (30/10 – 3 எஞ்சிய வாக்குகள் 00)
C கட்சி – 16 (16/10 – 1 எஞ்சிய வாக்குகள் 06)
D கட்சி – 8
D கட்சிக்கு முதல் சுற்றில் ஆசனம் கிடைக்காது, எனவே இரண்டாவது சுற்றுக்கு 8 வாக்குகள் உள்ளன.
இதற்கமைய முதல் சுற்றில் ஆசனம் பகிரப்பட்டதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றிற்காக 2 ஆசனங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதனை உங்களால் அவதானிக்க முடியும்.
அதற்கமைய எஞ்சியுள்ள இரண்டு ஆசனங்கள் கட்சிகளின் எஞ்சிய வாக்குகளில் அதிக வாக்குகளை கொண்ட கட்சிக்கே அந்த இரு ஆசனங்களும் வழங்கப்படும்.
A கட்சி – எஞ்சிய வாக்குகள் 6
B கட்சி – எஞ்சிய வாக்குகள் 6
D கட்சி – 8 வாக்குகள்
இதன்படி அதிகளவில் எஞ்சிய வாக்குகளை பெற்ற கட்சி D ஆகும். எனவே D கட்சிக்கு ஒரு ஆசனம் வழங்கப்படும். அடுத்ததாக, அதிகளவில் எஞ்சிய வாக்குகளை கொண்ட கட்சிக்கே மற்றைய ஆசனம் வழங்கப்படும். ஆனால் இங்கு நாம் குறிப்பிட்டுள்ள உதாரணத்தின் படி, A, C இரண்டு கட்சிகளும் சம எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றுள்ளன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சீட்டிழுப்பின் மூலம் தெரிவுசெய்யப்படும் கட்சிக்கே மற்றைய ஆசனம் வழங்கப்படும்.
இந்த சீட்டிழுப்பில் C கட்சி வெற்றிபெற்றது என வைத்துக்கொள்வோம். அதற்கமைய குறித்த மாவட்டத்தின் இறுதி முடிவின்படி எத்தனை ஆசனங்கள் கிடைக்கின்றன என்று பார்ப்போம்
A கட்சி – கிடைக்கப்பெற்ற வாக்குகள் 36 – 3 ஆசனங்கள் – போனஸ் 1
B கட்சி – கிடைக்கப்பெற்ற வாக்குகள் 30 – 3 ஆசனங்கள்
C கட்சி – கிடைக்கப்பெற்ற வாக்குகள் 16 – ஆசனம் 1-1
D கட்சி – கிடைக்கப்பெற்ற வாக்குகள் 8 – 1 ஆசனம்
எவ்வாறாக இருப்பினும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், அநேகமான கட்சிகளின் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் 5% மேல் வாக்கு வீதத்தினை பெற்றிருந்தாலும், சிறு கட்சிகளுக்கு ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் போய்விடும்.
கட்சிகள் இடையே ஆசனங்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் இப்போது உங்களுக்கு ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கும்.
