INTRO:
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 173 ஆசனங்களை பெற்றதாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூக வலைத்தளங்களில் “சிரமதானம் பண்ண சொன்னா பள்ளத்த தோண்டி புதைச்சி விட்டானுகள்” என இன்று (15.11.2024) பதிவிட்டு பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
இந்த தகவலின் உன்மைத் தன்மை குறித்து ஆராய்வதற்கு நாம் தீர்மானித்தோம்
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் நாம் குறித்து புகைப்படத்தில் உள்ள தகவலினை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளுடன் ஒப்பிடுகையில், சில தேர்தல் மாவட்டங்களில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை சரியாக இல்லை என்பதை காணமுடிகிறது.
அதன்படி, இறுதியான வெளியான நாடளாவிய ரீதியிலான முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) உண்மையில் 173 ஆசனங்களை அல்ல, 159 ஆசனங்களை வென்றுள்ளது. மேலும், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 29 இடங்களுக்கு பதிலாக 40 இடங்களை வென்றது. புதிய ஜனநாயக முன்னணிக்கு 11 ஆசனங்கள் இல்லை 05ஆசனங்கள். இலங்கை தமிழரசு கட்சி 03 ஆசனங்கள் அல்ல, அக்கட்சியின் மொத்தமாக 08 ஆசனங்கள் பெற்றுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி 11 ஆசனங்களைப் பெற்றதாகக் கூறினாலும், உண்மையில் அவர்கள் பெற்றிருந்த ஆசனங்களின் எண்ணிக்கை 5 ஆகும்.
ஒட்டுமொத்த முடிவுகள் மற்றும் பிரிக்கப்பட்டுள்ள ஆசனங்கள் மற்றும் தேசியப் பட்டியல் ஆசனங்கள் உட்பட இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ முடிவு பின்வருமாறு.

மேலும், மேற்கண்ட சமூக ஊடகப் பதிவு, இறுதி முடிவுகள் வெளியாவதற்கு முன், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக LAcNet Election Projection செய்த ஒரு கணிப்பு அனுமானத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதைக் காண முடிந்தது.
இதுகுறித்து விளக்கமளித்த அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் இறுதி என பெயரிடப்பட்டுள்ள மாவட்டங்களில் மட்டுமே இறுதி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளதாக விளக்கமளித்திருந்தனர். இருப்பினும், தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி முடிவுகள் வெளிகியதன் பின்னர் அவர்களின் அனுமானத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
பாராளுமன்ற தேர்தலில் 173 ஆசனங்களை NPP பெற்றது என பரவும் தகவல் உண்மை இல்லை என கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.