
கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்கள் பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். அதில் குறிப்பாக கொரோனா வைரஸ்க்கு இது தான் மருந்து என்று பலர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
அதில் வேப்பிலை மற்றும் கீழாநெல்லியை உபயோகித்து கொரோனாவில் இருந்து தப்பிக்க மருந்தாக பயன்படுத்தலாம் என்ற வீடியோ எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Crimenews என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரானோ வைரசு
அழகுத் தமிழில், விழிப்புணர்வு அறிவிப்பு…!!!!! ” என்பதே அந்த பதிவாகும்” என்று இம்மாதம் 16 ஆம் திகதி (16.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த வீடியோ
Fact Check (உண்மை அறிவோம்)
கீழாநெல்லியின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து பார்க்கையில்,
- மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.
- இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு.
- கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
- தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.
- இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.
- சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்
- உடல்சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக் கரைக்கும்.
- ரத்தசோகையைச் சரிசெய்யும் .
- கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும்.
- மலட்டுத் தன்மையைப் போக்கும்.
- சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு.
- சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

இது போன்ற மருத்துவ குணங்கள் அதற்கு காணப்பட்டு வருகின்றது. மேலும் நாம் வேப்பிலையில் காணப்படும் மருத்துவ குணங்களை ஆய்வு செய்தோம்.
- வயிற்று பிரச்சனைகள்
- அம்மை நோய்
- விஷ முறிவு
- தோல் வியாதிகள்
- புற்று நோய்
- பல் பிரச்சனைகள்
- சுவாச கோளாறுகள்
- புண்கள்

Dheivegam Link | Archived Link
குறித்த வேப்பிலை மற்றும் கீழாநெல்லி இலைகள் இயற்கையாகவே மருத்துவ இயல்புகளை கொண்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் காணப்படும் மருத்துவ குணங்கள் கொரோனா வைரஸினை தடுக்கும் என்று எவ்விதமான விஞ்ஞான ரீதியான கண்டுப்பிடிப்புகளோ அல்லது ஆதாரங்களோ இதுவரையில் கண்டறியப்படவில்லை.
மேலும், கொரோனா வைரஸ் பரபல் ஆரம்பமாகிய நாள் முதல் இதுவரையான காலப்பகுதியில் எவ்விதமான மருத்து வகைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.


பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படும் அனைத்து விடயங்களும் உண்மையென கருதி அதை செய்து பார்க்க முயல வேண்டாம் என்று எமது வாசகர்களுக்கு நாம் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கொரோனா வைரஸ் தொற்று உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா என்று தெரிந்துக்கொள்ள அருகில் இருக்கும் வைத்தியசாலையிக்கு சென்று பரிசோதனை செய்து உரிய மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துக்கொள்கின்றோம்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க வேப்பிலை மற்றும் கீழாநெல்லி மருந்தாக உபயோகிப்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Title:கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க வேப்பிலை மற்றும் கீழாநெல்லி மருந்தா?
Fact Check By: Nelson ManiResult: Partly False