ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ரணில் 4 கோடிக்கு கஜூ சாப்பிட்டாரா?

இலங்கை | Sri Lanka

INTRO 

அரசியல்களத்தை பொறுத்தவரையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் சிலர் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பல தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதனை எம்மால் காணமுடிகின்றது.

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த செய்தியின் உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மெற்கொண்டது.

 தகவலின் விபரம் (what is the claim)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் கஜூ சாப்பிடுவதற்கு 4 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு கடந்த மாதங்களில் காணொளி ஒன்று சமூக உடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.

Facebook Link | Archived Link

குறித்த காணொளியில் ஒரு வருசத்தில 4.கோடி 70 இலட்சத்துக்கு கஜூ மட்டும் திண்டு இருக்கின்றார்கள் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்.

திருட்டு எம்பிக்களை மாற்றுவோம், நாட்டை மீட்போம்….. என தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.10. 04 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதன் உண்மை அறியாத பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சின் போது  கஜூ சாப்பிடுவதற்காக 4 கோடி செலவாகியமை தொடர்பான செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்தனவா என நாம் முதலில் ஆராய்ந்தோம். 

இருப்பினும் அவ்வாறான எந்தவொரு செய்தியையும் எம்மால் காணமுடியவில்லை.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தின் போது  உட்கொள்ளப்பட்ட உணவு தொடர்பில் தற்போதைய அரசாங்கம் ஏதேனும்  கணக்காய்வு அல்லது அறிக்கை வெளியிட்டதா  என ஆராய்ந்த போது எந்த அமைச்சிலும் அதற்கான ஆவணங்கள் எமக்கு கிடைக்கவில்லை.

ஜனாதிபதி ஊடக பிரிவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில்  இவ்வாறு கணக்காய்வுகள் எதுவும் செய்யப்பட்டனவா  என்பது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினரிடம் வினவியபோது, ​​முன்னாள் ஜனாதிபதி என்ன சாப்பிட்டார் என்பது தொடர்பான  விசாரணை எதுவும்  நடத்தப்படவில்லை எனவும் அவ்வாறான அறிக்கையும் வெளியிடப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

2022 ஆம் ஆண்டில், சுமார் 4 கோடிக்கு  கஜூ சாப்பிட்டதாக துறைமுக அதிகாரசபை மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது

சுமார் 4 கோடிக்கு  கஜூ சாப்பிட்டதாக துறைமுக அதிகாரசபையின் மீது குற்றச்சாட்டு எழுந்ததனை தொடர்ந்து 23. 06. 2022 அன்று நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் அது தொடர்பில் விவாதிக்கப்பட்டது. 

குறித்த விவாதம் தொடர்பில் ‘சியத’ ஊடகத்தில் வெளியான அறிக்கையிடல் பின்வருமாறு

Facebook

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் 4 கோடிக்கு கஜூ  சாப்பிட்டதற்கான உத்தியோகபூர்வ பதிவுகள் எதுவும் இல்லை என்பதுடன், தற்போது பகிரப்படும் காணொளியானது  2021ம் ஆண்டு துறைமுக ஊழியர்களுக்கு கஜூ வழங்க 47 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தமையுடன் தொடர்புடையது என்பதுவும் தெளிவாகின்றது.

2022 ஆம் ஆண்டு கோப் குழுவின் விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்ட விடயங்கள்

கொழும்பு துறைமுகத்தில் உணவுக்காக ஒதுக்கப்படும் பணத்தில் பாதி கஜூ உண்பதற்கு செலவிடப்படுவதாக முன்னாள் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.Link

எவ்வாறாயினும் 2021ஆம் ஆண்டு துறைமுக ஊழியர்களின் உணவுக்காக கஜூ  வழங்குவதற்காக 47 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக , இது தொடர்பில் கோப் குழு முன்னிலையில் கருத்து தெரிவித்த துறைமுக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 

கஜூவிற்காக செலவிட்ட உண்மையான விலை தவறாக முன்வைக்கப்பட்டதனால் ஏற்பட்ட அசெகரியம் தொடர்பில் அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிரோஷன் கோரகனகே, கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத்திற்கு கடிதமொன்றை சமர்பித்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு

2021 ஆம் ஆண்டில் 9990 ஊழியர்களில் உணவு பெறும் ஊழியர்களின் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை 788 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டில் ஒரு வேளை உணவுக்காக சுமார் 332 ரூபா செலவிடப்பட்டுள்ளது. அந்த உணவிற்காக செலவிடப்பட்ட மொத்த தொகையில் 15% கஜூவிற்கு செலவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த அறிக்கையை பார்வையிட 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு) 

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில்  4 கோடிக்கு கஜூ உட்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட  காணொளியானது, 2021 ஆம் ஆண்டில் துறைமுக ஊழியர்களின் உணவிற்காக கஜூ  வழங்குவதற்கு  47 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளியின்  ஒரு பகுதி என்பது தெளிவாகின்றது.

மேலும் அரசியல் இலாபம் கருதி மக்களை திசை திருப்பும் நோக்கில் இந்த காணொளியானது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் கஜூ உட்கொள்வதற்காக செலவிடப்பட்ட தொகை என தவறாக சித்தரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளமை புலனாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ரணில் 4 கோடிக்கு கஜூ சாப்பிட்டாரா?

Written By: Suji Shabeedhran  

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *