நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டங்கள் என பரவும் தகவல் உண்மையா ?

False இலங்கை | Sri Lanka


INTRO:  
இலங்கையில் நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டங்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link  | Archived Link 

சமூக வலைத்தளங்களில் “ சாரதிகள் கவனத்திற்கு -ஆப்பு ரெடி -நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டங்கள்******************

சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt ) Rs. 1000

புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500

இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000

வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 + வாகனத்தை நீதீமன்றத்துக்கு எடுத்துச்செல்லப்படும்

(Vehicle will be taken to court..)

ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000 வாகனம் பறிமுதல் செய்யப்படும்

வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should be taken along while Driving)

அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் (Mobile while driving) Rs. 5000

3 முறைக்குமேல் அபராதமும் விதித்தால் 2 மற்றும் 4 சக்கர ஒட்டுனர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும்

அதற்கு மேலும் அபராதம் வாங்கினால் குற்றமாக கருதப்பட்டு ஒட்டுனர் உரிமம் முற்றிலுமக ரத்துசெய்யபடும்.

அடுத்தவர்களும்அறிய அதிகமாய் பகிருங்கள் !!!.”இம் மாதம் 22 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (22.01.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இலங்கையில் நடைமுறைக்கு புதிய மோட்டார் வாகன சட்டங்கள் வந்துள்ளமை தொடர்பாக பிரதான ஊடகங்களில் ஏதேனும் செய்தி அறிக்கைகள் உள்ளதா என்பதை நாங்கள் முதலில் ஆய்வினை மேற்கொண்டோம்.

ஆனால் அவ்வாறு புதிய சட்டங்கள் அண்மைக்கு அமுலுக்கு வந்ததாக எந்த செய்தியும் எமக்கு காணக்கிடைக்கவில்லை.

இதனை நாம் மேலும் உறுதி செய்துக்கொள்ள இலங்கை பொலிஸ் தலைமையகத்திற்கு தொடர்புக்கொண்டு வினவியபோது, அவ்வாறான புதிய சட்டங்கள் எதுவும் அமுலுக்கு வரவில்லை  என தெரிவித்தனர்.

நாம் இது தொடர்பாக, எழுமாற்றாக சில வாகன பயனாளர்களை தொடர்புக்கொண்டு இதுகுறித்து வினவியபோது, அவ்வாறு வாகன சட்டங்களில் புதிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என எமக்கு தெரிவித்தனர்.

சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt ) Rs. 1000 என்ற சட்டம் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது இது கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ளமை கண்டறியமுடிந்தது. News Link

தொடர்ந்து நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, 2019 ஆம் ஆண்டு 10 ஆம் இலக்கம் திருத்த சட்டத்துக்கு அமைவாக இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து சட்டம் அமுலுக்கு வந்தமை காணக்கிடைத்தது.

virakesari.lk | sundaytimes.lk | adaderana.lk | newsfirst.lk 

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்த அறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

போக்குவரத்து விதிமீறல்களை நிர்வகிக்க புதிய மென்பொருள்


போக்குவரத்து விதிமீறல்களை நிர்வகிக்க புதிய மென்பொருளைப் பயன்படுத்த பொலிஸ் திணைக்களம் கடந்த 21 ஆம் திகதி (21.01.2025) ஆரம்பித்துள்ளது.

police.lk

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டங்கள் என பகிரப்படும் தகவல் தவறானது என  கண்டறியப்பட்டது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டங்கள் என பரவும் தகவல் உண்மையா ?

Fact Check By: S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *