
கொரோனா வைரஸ் பற்றி பல தரப்பினர் போலியான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் பயத்தினை உண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் குர்ஆனின் மகிமை சீனாவுக்கு விளங்கி விட்டது, தடை செய்யப்பட்ட குர்ஆன் மீண்டும் அரசே மக்களுக்கு விநியோகம் செய்கின்றது என ஒரு செய்தியுடன் வீடியோ ஒன்றையும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Pottuvil Riyas என்ற பேஸ்புக் பக்கத்தில் ”குர்ஆனின் மகிமை சீனாவுக்கு விளங்கி விட்டது, தடை செய்யப்பட்ட குர்ஆன் மீண்டும் அரசு மக்களுக்கு விநியோகம்.” என்று இம்மாதம் 8 ஆம் திகதி (08.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் ஒரு வீடியோவும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில், குறித்த பேஸ்புக் பதிவில் இருந்த வீடியோ பதிப்பின் ஒரு புகைப்படத்தினை ஸ்கிரின் ஷாட்டை எடுத்து Google Reverse images பயன்படுத்தி தேடுதலில் ஈடுப்பட்டோம்.
குறித்த தேடலின் போது, சீனாவிலுள்ள கத்தோலிக்க விசுவாசிகளுக்கு முதல் முதலில் பைபிள் கிடைக்கப்பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் நாம் மேற்கொண்ட தேடுதலில் International Christian Concern என்ற யூடியுப் அலைவரிசையில் 2014 ஆம் ஆண்டு குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
குறித்த நிகழ்வு தொடர்பில் சில இணையத்தளங்களும் செய்தி வெளியிட்டிருந்தனர். குறிப்பிட்ட செய்தியில் சீனாவில் இருக்கின்ற கத்தோலிக்க விசுவாசிகளுக்கு முதல் முதலாக காணக்கிடைத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரிவித்துள்ளனர்.


மேலும் குறித்த பதிவில் குர்ஆன் வைத்தவாறு ஒரு புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த புகைப்படம் azzamizzulhaq என்பவர் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி (17.01.2020)அவரின் இன்ஸ்டெகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Instagram post | Archived Link
குறித்த புகைப்படத்தினை எடுத்து வீடியோவுடன் இணைத்து பேஸ்புக்கில் தவறாக பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.
அதே போல, குறித்த செய்தி தொடர்பில் எமது இந்திய ஆங்கில பிரிவு மேற்கொண்ட ஆய்வினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் சீனாவில் தடை செய்யப்பட்ட குர்ஆன் மீண்டும் மக்களுக்கு விநியோகம் என்ற பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. இதை தவறாக பேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றம் செய்து மக்கள் மத்தியில் வதந்தி பரப்பி வருகின்றனர்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், சீனாவில் தடை செய்யப்பட்ட குர்ஆன் மீண்டும் மக்களுக்கு விநியோகம் என பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

Title:சீனாவில் தடை செய்யப்பட்ட குர்ஆன் மீண்டும் மக்களுக்கு விநியோகமா?
Fact Check By: Nelson ManiResult: False