இயற்கையாக உருவாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டி என தெரிவிக்கப்பட்ட புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது.
எனவே அது குறித்த உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் தற்சாற்பு வாழ்க்கை என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு..
வாழ்த்துக்கள் அம்மா
இயற்கை குளிர்சாதன பெட்டி
இதே ஒரு சினிமா நடிகை பண்ணிருந்தா கிடைக்கும் அங்கீகாரம் இது போன்ற கிராமத்து பெண்களுக்கு கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டு அந்த புகைப்படமானது கடந்த 2025.07.08 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதனை உண்மை என எண்ணி பலர் கமென்ட் செய்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இவ்வாறான ஒன்று உண்மையில் உருவாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அது குறித்து வெவ்வேறு ஊடகங்களில் கூட பேசப்பட்டிருக்கும் ஆனால் நாம் மேற்கொண்ட ஆய்வில்அவ்வாறான தகவல்கள் எதனையும் எம்மால் காமுடியவில்லை.
அத்துடன் பெண்ணொருவரினால் இயற்கையான முறையில் குளிர்சாதனப்பெட்டியொன்று உருவாக்கப்பட்டிருந்தால் அந்த பெண்ணின் பெயர், இது எந்த இடத்தில் உருவாக்கப்பட்டது என்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் எனினும் குறித்த பதிவில் அவ்வாறான எந்த விபரங்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
குறித்த புகைப்படத்தினை நாம் கவனிக்கும் போது அது குளிர்சாதனப்பெட்டி வடிவத்தில் மண்ணால் உருவாக்கப்பட்ட ஒரு பெட்டியின் தோற்றத்தை ஒத்திருந்தது. எனினும் அதில் கைப்பிடி மற்றும் பூட்டு என்பன கதவின் உட்புறத்தில் அமைக்கப்பட்டிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.
மேலும் இதனை உண்மை என எண்ணி பலர் கமென்ட் செய்திருந்தாலும் இது போலியானது மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்ற விதத்திலான பல எதிர்மறையான கமென்ட்களையும் எம்மால் காணமுடிந்தது.
எனவே நாம் இந்த புகைப்படத்தை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, இது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதியானது.
அத்துடன் குறித்த புகைப்படத்தில் Village kisan என்ற watermark காணப்பட்டது. எனவே நாம் அது தொடர்பில் ஆராய்ந்த போது village Kisan என்ற பேஸ்புக் பக்கத்தில் குறித்த புகைப்படமானது பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததுடன் இதே போன்று AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட பல்வேறு படங்களையும் எம்மால் பார்க்கக் கூடியதாக இருந்தது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok | YouTube
Conclusion: முடிவு
எனவே எமுது ஆய்வின் அடிப்படையில் பெண்ணொருவரினால் இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டி என பகிரப்படும் புகைப்படமானது போலியானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட படம் என்பதுவும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இது இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டியா?
Fact Check By: suji ShabeedharanResult: False
