
தமழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலான நடிகையான காஜல் அகர்வால் இறந்துவிட்டதாக தெரிவித்து சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.
எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
குறித்த காணொளியானது காஜல் அகர்வால் இறந்துவிட்டதாக தெரிவித்து நேற்று (2025.09.07) பதிவறே்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் அவர் இறந்து விட்டதாகவும் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பல சினிமா பிரபலங்கள் வருகைத் தருவதனைப் போன்ற பல்வேறு புகைப்படங்கள் மறறும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையையும் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
பிரபல நடிகையான காஜல் அகர்வால் வாகன விபத்தில் இறந்துவிட்டதாக இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பலர் தங்களின் சமூக ஊடகங்களின் வழியாக பதிவிட்டு வருகின்றனர்.
இருப்பினும் உண்மையில் அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்குமாயின் அது குறித்து இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும்.
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் காஜல் அகர்வால் இறந்துவிட்டதாக தெரிவித்து எந்தவொரு பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகவில்லை என்பது உறுதியானது.
அதேபோன்று இந்திய சினிமாத்துறையைச் சார்ந்த எவரும் அவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதத்திலான பதிவுகளை அவர்களின் உத்தியோகபூர்வ சமூக ஊடக பக்கங்களில் பதிவிடவில்லை என்பதனையும் அறிமுடிந்தது.
மேலும் அவர் இறந்துவிட்டதாக பகிரப்படும் காணொளியில் அவரின் இறந்த முகம் காட்டப்படவில்லை.
ஆகவே நாம் காஜல் அகர்வாலின் சமூக ஊடகக் கணக்குகளை ஆராய்ந்தோம், இதன்போது அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் அவரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்குகளில் இறுதியாக ஆகஸ்ட் 29 ஆம் திகதியே பதிவுகள் இடப்பட்டிருந்தன,அதில் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் மாலைத்தீவு சுற்றுப்பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இந்திய நடிகை காஜல் அகர்வால் வாகன விபத்தில் உயிரிழந்துவிட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டது. அத்துடன் அவர் இறந்து விட்டதாகவோ அல்லது வாகன விபத்தில் சிக்கியதாகவோ எந்தவொரு இந்திய ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:பிரபல இந்திய நடிகை காஜல் அகர்வால் இறந்துவிட்டாரா?
Fact Check By: Suji shabeedharanResult: False


