INTRO :

பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக நிற்கும் ரொனால்டோ என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):



Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “#பாலஸ்தீனத்துடன் துணை நிற்கும் ரெணால்டோ...🇯🇴🇯🇴 “ என இம் மாதம் 16 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு ( 16.10.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Archived Link

அதே போன்று சில சர்வதேச ஊடகங்களிலும் குறித்த வீடியோ தொடர்பாக 2016 ஆம் ஆண்டு காலத்தில் வெளியான செய்திகளும் கிடைக்கப்பெற்றன.

washingtonpost.com |thesun.co.uk |marca.com

நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக நிற்கும் ரொனால்டோ என பரவுகின்ற வீடியோ 2016 ஆம் ஆண்டு சிரியாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக வெளியிடப்பட்ட வீடியோ என்பது எம்மால் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக நிற்கும் ரொனால்டோ என பரவும் வீடியோ உண்மையா?

Written By: S G Prabu

Result: False