
தமிழ் திரையுலகத்தினை தமது காமெடி நடிப்பினால் தம் கைவசம் இன்று வரை வைத்துள்ளவர் என்றால் அது நடிகர் வடிவேலு தான்.
வடிவேலுவின் பிறந்தநாள் எப்போது என்று பலர் மத்தியில் இன்னும் குழப்பநிலை காணப்படுகின்றது.
மேலும், நேற்று (10.10.2019) தான் நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் என்று பலர் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருந்தனர்.
இது குறித்து உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
Selvaraj Kulandaivelu என்ற பேஸ்புக் கணக்கில் “தன் துன்பம் மறைத்து பிறரை சிரிக்க வைக்கவே பிறந்திருக்கும் வைகை புயல் #வடிவேலு அவர்களுக்கு
இனிய #பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
#HappyBirthdayVadivelu ” என்று நேற்று (10.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நடிகர் வடிவேலுவின் பிறந்த நாள் எப்போது என்று கூகுளில் தேடலினை மேற்கொண்டோம்.
அப்போது அவரின் பிறந்த நாள் கடந்த மாதம் 12 ஆம் திகதி (12.09.1960) என காணப்பட்டது.
மேலும் நாம் விக்கிப்பிடியாவில் ஆய்வினை மேற்கொண்ட போதும், அதிலிரும் அவரின் பிறந்த நாள் செம்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இது குறித்த கடந்த மாதம் 16 ஆம் திகதி இந்திய தொலைகாட்சியான சன் டிவி இற்கு ஒரு காணொளி மூலம் நடிகர் வடிவேலு உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த காணொளி பதிவு,
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அடிப்படையில் நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் செம்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆகும்.
