INTRO :
75 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெளிவுபடுத்தல் கட்டுரையினை ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கீழே வெளியிட்டுள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” ஏதேனும் குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால், அவர்களை உடனடியாக LRH - கொழும்புக்கு அனுப்பவும்..

ரோட்டரி கிளப் கொழும்பு மேற்கு ( அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்), 75 குழந்தைகள், இலவச அறுவை சிகிச்சைக்காக இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல $15 மில்லியன் மானியம் பெற்றனர். மே முதல் வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 🙏

-டாக்டர். அரவிந்த திசாநாயக்க

(Please share this msg to who need this assistance)

Tp.no: 94 76 489 2969 “ என இம் மாதம் 20 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (20.04.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் தகவல் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது கடந்த 2021 ஆம் ஆண்டு லங்காதீப என்ற சிங்கள பத்திரிகையின் இணையதளத்தில் வெளியாகியிருந்த கட்டுரை எமக்கு கிடைக்கப்பெற்றது. அதில் இலங்கையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, இந்தியாவின் கொச்சியில் அமைந்துள்ள அமிர்தா மருத்துவமனையில் (அம்ரிதா மருத்துவ அறிவியல் நிறுவனம்) இலவச அறுவை சிகிச்சை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, சுகாதார அமைச்சு, மாவட்ட 3201 இந்திய சர்வதேச ரோட்டரி கழகம் மற்றும் RID 3220 கொழும்பு மேற்கு ரோட்டரி கழகம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அப்போதைய சுகாதார அமைச்சர் திரு.கெஹலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. Link | Archived link

கொழும்பு மேற்கு ரோட்டரி கிளப்

இதுகுறித்து விசாரிப்பதற்காக மேற்கு கொழும்பு ரோட்டரி கழகத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.

2022 ஆம் ஆண்டு முதல் குறித்த தவறான செய்தி சமூக ஊடகங்கள் ஊடாக பரவி வருவதாகவும், கொழும்பு மேற்கு ரோட்டரி கழகம் அதனை விளக்கி அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டதாகவும் எமக்கு தெரிவித்தார்.

மே 2022 முதல் செப்டம்பர் 2022 வரை அமலில் இருந்தது. மேலும், $200,000 மொத்த மானிய மதிப்புள்ள நிதி ஒதுக்கீடு ரோட்டரி கிளப் ஆஃப் இந்தியா மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் மூலம் உலகளாவிய மானியத்தின் கீழ் நிதியளிக்கப்பட்டது.

குறித்த திட்டத்திற்கான உள்ளூர் திட்ட பங்காளியாக கொழும்பு மேற்கு ரோட்டரி கிளப் உள்ளது.

முக்கியமாக இந்த நிதியில் இருந்து 75 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காகவும் (Tetralogy of Fallot and VSD) , இதய தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கான பயிற்சி மற்றும் எக்கோ கார்டியோகிராபி (Fetal Echocardiography) ஆகியவற்றை வழங்குதல் குறித்த திட்டத்தின் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனை (அம்ரிதா மருத்துவ நிறுவனம்) இந்த அறுவை சிகிச்சைகளை செய்வதில் பங்குதாரர் என்றும் கூறப்பட்டது.

Facebook | Archived Link

திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 75 குழந்தைகளில் 50 பேர் ஏற்கனவே சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்போது அடுத்தக்கட்ட குழந்தைகள் வெளியேறி வருவதாகவும் கூறினார்.

குறித்த திட்டத்தின் கீழ் உதவிகள் மற்றும் பயிற்சிகள் பெற்றவர்களின் விபரங்களை அனைத்து கொழும்பு மேற்கு ரோட்டரி கழகத்தின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

இது தொடர்பாக இந்திய ஊடகம் வெளியிட்டிருந்த செய்தி அறிக்கையும் காணக்கிடைத்தது.

மேற்படி சமூகவலைத்தளப் பதிவில் இணைப்பாளராக வைத்தியர் அரவிந்த திஸாநாயக்க குறிப்பிடப்பட்டதன் காரணமாக அவரிடமும் இது குறித்து நாம் வினவியபோது, தாம் இனி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணிபுரிவதில்லை எனத் தெரிவித்தார். மேலும், இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற விரும்புவோர், இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்போதைய வைத்திய நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று வைத்திய அரவிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:75 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை தொடர்பாக பரவும் தகவலின் உண்மை தன்மை ?

Fact Check By: S.G.Prabu

Result: Insight