1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சட்டத்தின் 82 (4) (ஈ) ஆம் பிரிவின் பிரகாரம், உடல் வலிமையிழப்பிற்குட்பட்ட எவரேனுமொருவர் கால்நடையாகவோ, இலங்கை பொதுப் போக்குவரத்து சாதனமொன்றிலோ தமது வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்வதற்கு முடியாதவராக இருப்பின், குறித்த வாக்களிப்பு நிலையத்திற்குப் போய்வருவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக தங்களது பிரதேசத்திற்குரிய மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரிடம் தானாகவோ அல்லது தனது சார்பாக மற்றொருவரோ, குறித்த நபர் வேட்பாளர், தேர்தல் முகவர், அதிகாரம் பெற்ற முகவர், பிரதேச முகவரொருவராக அல்லாத வேறொருவரினால் விண்ணப்பமொன்றைச் சமர்ப்பிக்க முடியும்.

இந்த வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை மாவட்டத் தேர்தல் அலுவலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும், கிராம அலுவலர் அலுவலகங்களிலும் அல்லது www.elections.gov.lk இணையத் தளத்திலும் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தினை தேர்தல் தினத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக அதாவது 2024 செப்தெம்பர் மாதம் 14 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ உரிய தெரிவத்தாட்சி அலுவலரிடம் (மாவட்டச் செயலாளர்/ அரசாங்க அதிபர்) அல்லது மாவட்ட பிரதி அல்லது உதவித் தேர்தல்கள் ஆணையாளருக்குச் (மாவட்டத் தேர்தல் அலுவலகம்) சமர்ப்பித்தல் வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பவர், தன்னால் பொது போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தியோர் அல்லது கால்நடையாகவோ வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்ல முடியாதென்பதை நிரூபிக்கக்கூடியவாறு, பதிவுசெய்யப்பட்ட வைத்தியரொருவரின் (மேற்கத்தேய, உள்நாட்டு) வைத்தியச் சான்றின் மூலம் தமது விண்ணப்பத்தை உறுதிப்படுத்திக்கொண்டிருப்பின், தெரிவத்தாட்சி அலுவலரால் அதற்கான தீரமானம் மேற்கொள்வதற்குப் பெரிதும் உதவியாக அமையும். உடல் வலிமையிழப்பிற்கு உட்பட்டராகவிருப்பவர். ஒரு அரச வைத்தியர், பதிவு செய்யப்பட்ட அல்லது உதவி வைத்தியர், ஆயுர்வேத வைத்தியர் ஒருவரிடம் சென்று எவ்வித கட்டணமுமின்றி தன்னை பரிசோதித்து வைத்திய சான்று வழங்குமாறு கோரமுடியும். தனியார் வைத்தியராகவிருப்பின் (மேற்கத்தேய அல்லது உள்நாட்டு) அவர் வழங்கும் சான்றிதழில்

அவ்வைத்தியரின் பெயர், பதிவிலக்கம் என்பன குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.

தேர்தல் ஆணைக்குழுவால் வலிமையிழப்புக்குட்பட்ட மற்றும் பார்வையிழப்பிற்குட்பட்ட நபர்களுக்காக விநியோகிக்கப்பட்ட 10 வருடங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தற்காலிக அடையாள அட்டையுடைவர்கள் வைத்திய சான்றிதழைப் பெற்றுக்கொள்ளல் அவசியமில்லை.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.