Archives

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பதிவான நிலநடுக்கத்தின் காட்சி என பகிரப்படும் காணொளி உண்மையானதா..?

INTRO : சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பதிவான நிலநடுக்கத்தின் காட்சி என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டரில் பதிவான நிலநடுக்கம் வாசிக்க – https://adaderanatamil.lk/news/cmf0hlt9a004uqplpjk2jjx8v WhatsApp இல் பின்தொடர :  https://rb.gy/g9g2b மேலதிக […]

Continue Reading

வைத்தியர் பாலித ராஜபக்ஷவை ஒழுக்காற்று விசாரணைக்கு அழைத்தமைக்கான காரணம் என்ன?

கடந்த 4 ஆம் திகதி பதுளை  – எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களிள் உயிரை காப்பாற்றுவதற்காக தனது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் செயற்பட்ட வைத்தியர் பாலித ராஜபக்ஷவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): […]

Continue Reading

 உலகின் மிகப் பெரிய முதலை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

உலகின் மிகப்பெரிய முதலை இந்தியாவில் சமீபத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link உலகின் மிகப்பெரிய முதலை… 20 அடி நீளமுள்ள உலகின் மிகப்பெரிய முதலை இந்தியாவில் சமீபத்திய வெள்ளத்தில் கண்டறியப்பட்டது. என தெரிவித்து குறித்த காணொளியானது கடந்த 2025.08.20 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

பிரபல இந்திய நடிகை காஜல் அகர்வால் இறந்துவிட்டாரா?

தமழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலான நடிகையான காஜல் அகர்வால் இறந்துவிட்டதாக தெரிவித்து சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த காணொளியானது காஜல் அகர்வால் இறந்துவிட்டதாக தெரிவித்து நேற்று (2025.09.07) பதிவறே்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் இறந்து விட்டதாகவும் அவருக்கு அஞ்சலி […]

Continue Reading

எல்ல பேருந்து விபத்தில் மீட்பு பணிக்காக சென்ற ஒருவர் கையிறு அருந்து பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பா..?

INTRO :எல்ல பேருந்து விபத்தில் மீட்பு பணிக்காக சென்ற ஒருவர் கையிறு அருந்து பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ 💥Ai Picture | எல்லே பேருந்து விபத்தின் போது மீட்பு […]

Continue Reading

Dialog நிறுவனம் பழைய வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குகிறதா?

இலங்கையில் அதிகளவானோர் பயன்படுத்தும் டயலொக் சிம்மிற்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): டயலொக் நிறுவனம் அவர்களின் பழைய வாடிக்கையாளர்களுக்கும், 5G சிம் வாடிக்கையாளர்களுக்கும் இலவச டேட்டா மற்றும் Air Time  வழங்குகிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை மாத்திரமே செல்லுபடியாகும் என்று வட்ஸ்அப் ஊடாக […]

Continue Reading

ஹிக்கடுவ ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துப் பிழையா?

சமூக ஊடகங்களில் பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பான உண்மை அறியாமல் பகிரப்படுவதனால் பல்வேறு தாக்கங்கள் சமூகத்தில் ஏற்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை! அந்த வகையில் தற்போது ஹிக்கடுவ புகையிரத நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழ் எழுத்துப் பிழை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் […]

Continue Reading

சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவின் புகைப்படங்களா இவை?

மேற்கு சூடானின் மர்ரா மலைப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 1000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது எடுப்பட்டவை என சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் நிலச்சரிவு மேற்கு சூடானின் மர்ரா […]

Continue Reading

சமீபத்தில் மெக்சிகோவில் இஸ்ரேல் தூதரகம் போராட்டக்காரர்களால் தீ வைப்பா..?

INTRO : சமீபத்தில் மெக்சிகோவில் இஸ்ரேல் தூதரகம் போராட்டக்காரர்களால் தீ வைப்பு என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ பற்றி எரிகிறது மெக்சிகோவில் இஸ்ரேல் தூதரகம் போராட்டக்காரர்கள் தீ வைப்பு.அநியாயத்திற்கும் அக்கிரமித்துக்கும் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் உலகெங்கிலும் […]

Continue Reading

ஜனாதிபதியின் கையெழுத்துடன் அச்சிடப்பட்ட புதிய நாணயத்தாள் தொடர்பான தெளிவுபடுத்தல்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சிடப்படுவதாக தெரிவக்கப்பட்ட தகவல்கள் காலத்திற்கு காலம் பகிரப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையெழுத்துடன் கூடிய 2000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை காணக்கிடைத்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link “பணம் அச்சிடப்பட்டதாக நாங்கள் கூறியபோது, ​​முடிந்தால் அநுரவின் […]

Continue Reading

செவ்வாய் கிரகத்தில் பழமையான விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதா?

செவ்வாய் கிரகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிலை கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link “செவ்வாய் கிரகத்தில் விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. இந்த சிலை செயற்கைக்கோள் மூலம் காணப்பட்டது. சில படங்கள் உங்களுடன் பகிரப்படுகின்றன” […]

Continue Reading

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தின் காணொளியா இது?

கடந்த 15 ஆம் திகதி பாகிஸ்தானில் பெய்த கடும் மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் உயிழந்ததோடு அதிகளவான பொருட் சேதங்களும் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த காணொளி தொடர்பான உண்மையை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link […]

Continue Reading

ரணில் தொடர்பில் பகிரப்படும் புகைப்படத்தின் உண்மை என்ன?

கடந்த 22 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அது குறித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் வைத்து ரணில் விக்ரமசிங்க ஜீவனி அருந்துவதைப் போன்ற புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What […]

Continue Reading

மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூசுப் பதவியை இராஜினாமாசெய்தாரா…?

INTRO : மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூசுப் பதவியை இராஜினாமா செய்தார் என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூசுப் ஆளுனர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். “என இம் […]

Continue Reading

ரணிலை வைத்தியசாலையில் பார்வையிட்டாரா பிரதமர் ஹரிணி..?

INTRO :முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வைத்தியசாலையில் பார்வையிட்ட பிரதமர் ஹரிணி என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ ரணிலை வைத்தியசாலையில் பார்வையிட்ட பிரதமர் ஹரிணி பிரதமர் ஹரிணி, திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் இணைந்து நேற்று […]

Continue Reading

மஹிந்த ராஜபக்ஷவை பார்க்க வந்த ஆதரவாளர்கள் கொண்டுவந்த உணவுப்பொருட்கள் குப்பையில் வீசப்பட்டதா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக அவரது ஆதரவாளர்கள் விஜேராமவில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு சென்றபோது அவர்கள் எடுத்துச்சென்ற உணவுப்பொருட்கள் குப்பையில் வீசப்பட்டதாக தெரிவித்து தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Claim 1: Facebook | Archived Link மஹிந்த ராஜபக்ஷவிற்காக கொண்டுவரப்பட்ட தயிர் உள்ளிட்ட உணவுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக மாநகரசபை குப்பை […]

Continue Reading

முன்னாள் ஜனாதிபதி ரணில் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படும் காட்சி என பரவும் வீடியோ உண்மையா..?

INTRO : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படும் காட்சி காட்சி என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ வைத்தியசாலை முழுவதும் அழுகை சத்தம் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட […]

Continue Reading

முன்னாள் ஜனாதிபதி ரணில் பிணையில் விடுதலையா..?

INTRO : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை வழங்கப்பட்டதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ ரணில் பிணையில் விடுதலை அரச நிதியை மோசடி செய்தார் என்று குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு […]

Continue Reading

Emirates airline 39 ஆண்டுகளில் ஒரு விபத்தும் இல்லாமல் உலகின் best airline-ஆக இருக்கிறதா..?

INTRO : Emirates airline 39 ஆண்டுகளில் ஒரு விபத்தும் இல்லாமல் உலகின் best airline-ஆக இருக்கிறது என பெயரிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில்“Emirates – 39 ஆண்டுகள், 700M பயணிகள், 0 Crash! #asiavilletamil […]

Continue Reading

Tank Cleaner மீன்கள் தண்ணீர் இன்றி  ஒரு மாதம் வரை உயிர் வாழுமா?

Tank Cleaner என்று அழைக்கப்படும் Pleco மீன்கள் ஒரு மாத காலம் வரை தண்ணீர் இன்றி காய்ந்து போனாலும் அதன் மேல் தண்ணீர் பட்டவுடன் அதற்கு மீண்டும் உயிர் வந்துவிடும் என தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் அதிகம் பகிருங்க சொந்தங்களே…! […]

Continue Reading