பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய வரவு செலவுத் திட்டத்தில்  12,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதா?

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 12,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில்  அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்காக 12,500 மில்லியன் […]

Continue Reading

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதா?

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை (condoms) வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Fb | Fb | Fb | Fb குறித்த பதிவில், இலவச பாடப்புத்தகங்கள் , இலவச சீருடைகள் , இலவச மதிய உணவு மற்றும் இலவச ஆணுறைகளை கூட வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு […]

Continue Reading

இலங்கை வங்கியின் ATM இயந்திரத்தின் திரையில் எழுத்துப்பிழை என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

இலங்கை வங்கியின் தானியங்கி இயந்திரத்தில் (ATM) அட்டையை உட்செலுத்தவும் என தெரிவிக்கப்படுவதற்கு பதிலாக ஆபாசமான வார்த்தை திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு படத்துடனான பதிவொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் இலங்கை வங்கியின் ATM வாசகம். இலங்கை வங்கியின் ATM மூலம் […]

Continue Reading

ரியான் ரிக்கெல்டனுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளாரா?

INTRO :  ரியான் ரிக்கெல்டனுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ரியான் ரிக்கெல்டனுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா மும்பை […]

Continue Reading

அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூபா 20,000 தினால் அதிகரிப்பா…?

INTRO:  ஐக்கிய மக்கள் சக்தியின் கன்னி வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 20 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “அரச ஊழியர்களின் […]

Continue Reading

அதானி நிறுவனத்தின் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டத்தை புதிய அரசாங்கம் ரத்து செய்துள்ளதா?

அதானி நிறுவனத்துடன் கடந்த அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொண்ட மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் புதிய அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளதான செய்திகள் சமூக ஊடகங்கள் உட்பட பிரதான ஊடகங்கள் வாயிலாக வெளியாகிய நிலையில் அரசு அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்துள்ளதா? என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link புதிய அரசாங்கத்தினால் அதானி காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டம் ரத்தாகியுள்ளது என்பதை குறிப்பிட்டு சமூக […]

Continue Reading

நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறாரா ரணில்..? – உண்மை தெரியுமா..? 

INTRO:   நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறார் ரணில் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “  நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறார் ரணில்.! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நிழல் (மாற்று) பாராளுமன்றத்தை நிறுவுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி […]

Continue Reading

புகையிரதத்தினுள் வெளிநாட்டு பயணிகளுக்கு மசாஜ் செய்யப்படுவதாக வெளிவந்த வீடியோவின் உண்மை தெரியுமா..?

INTRO:  ‘வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயில் பிரயாணத்தின் போது புதிய விடயம் என வீடியோவொன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பவரலாக பகிரப்பட்டு வந்தது. குறித்த வீடியோவில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் செய்வது போன்ற விடயங்கள் காணப்பட்டன. இது வெளிநாட்டினரை ஈர்ப்பதற்காக புகையிரத திணைக்களம் மற்றும் வெளியுறவு துறை அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விசேட திட்டம் என பலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது. புகையிரதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றதா எனவும் இது தொடர்பிலான உண்மையை தன்மையை தெரிவிக்குமாறும் எம்மிடம் […]

Continue Reading

கடவுச்சீட்டு விநியோக காரியாலத்தில் தீ விபத்தா…?

INTRO:   கடவுச்சீட்டு விநியோக  காரியாலத்தில் தீ விபத்து என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ பாஸ்போர்ட் ஒபிஸ் பத்துது. நம்முட வெளிநாட்டு கனவும் சேர்ந்து பத்துது 😭 ”இம் […]

Continue Reading

துப்பரவுப்பணியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர் என பரவும் தகவல் உண்மையா?

INTRO:   சுகாதார அமைச்சரான நலிந்த ஜயதிஸ்ஸ கண்டி போதான வைத்தியசாலையில் துப்பரவுப்பணியில் ஈடுபட்டார் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “துப்பரவுப்பணியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர்! புதிய சுகாதார அமைச்சரான […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜே.வி.பி தலைமை பொறுப்பில் இருந்து விலகினாரா?

INTRO:   தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததையடுத்து அரசு மற்றும் அக்கட்சியின் முடிவுகள் குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் இது போன்ற பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜே.வி.பியின் தலைமைத்துவம் குறித்தும் பகிரப்பட்ட அத்தகைய கருத்துக்கள் குறித்தும் நாங்கள் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

பிள்ளையான் தேர்தல் பிரச்சாரத்திற்காக இலவசமாக பியர் வழங்கினாரா? உண்மை என்ன?

INTRO:   2024 பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (2024.11.14) காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.  எனவே குறித்த தேர்தலை முன்னிலைப்படுத்தி அரசியல் கட்சிகள் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் கிழக்கு மாகாண அரசியல் கட்சிகளில் ஒன்றான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) தேர்தல் பிரச்சார ஸ்ட்டிக்கர் ஒட்டப்பட்ட பியர் கேன்களுடனான படத்துடன் கூடிய பதிவொன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் […]

Continue Reading

“சுமந்திரனுக்கு 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டது ” என்ற செய்தியின் உண்மைத் தன்மை என்ன?

INTRO:   தேர்தல் காலப்பகுதியில் தவறான தகவல்கள் பிரச்சார நோக்கில் பரப்பப்படுகின்றன.  யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகையான உதயன் பத்திரிகையின் வெளியீட்டை ஒத்த வடிவமைப்புடன்   ” போர்க்குற்ற விசாரணையில் மகிந்தவைக் காப்பாற்றுவதற்காக , சுமந்திரனுக்கு  120 கோடி வழங்கப்பட்டது  ” எனும் செய்தி வெளியிடப்பட்டு,  சமூக வலைத்தளங்களில்  பகிரப்படுகிறது. இந்த செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பான தேடலில் fact crescendo நிறுவனம் ஈடுபட்டது. முடிவில், இச்செய்தி போலியானது என்று உறுதிப்படுத்தப்பட்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது பற்றி தெளிவின்றி உள்ளீர்களா?

பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு சரியான முறையில் வாக்களிப்பது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் விதத்தில் நாம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு இம்முறை பாராளுமன்றத் தேர்தலின் போது பொலன்னறுவை, மொனராகலை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் வாக்குச்சீட்டுக்கள் ஒரே நிரலில் காணப்படுகின்றன மாதிரி படம் E ஏனைய மாவட்டங்களின் வாக்குச்சீட்டுக்கள் இரண்டஜ நிரல்களாக அச்சிடப்பட்டுள்ளன மாதிரி படம் இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு வாக்களிக்கும் சரியான முறை கட்சிக்கு வாக்களித்தல் விருப்பு வாக்குகளை வழங்கும் முறை மாதிரி […]

Continue Reading

பாராளுமன்ற தேர்தலில் ஆசனங்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 225 உறுப்பினர்களுக்காக இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 8888 பேர் போட்டியிடுகின்றனர். நீங்கள் வழங்கும் வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்திற்கு எவ்வாறு  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர் என்பது தொடர்பில் விரிவாக பார்க்கலாம். முதலில் நீங்கள் வழங்கிய வாக்குகளில் நிராகரிக்கப்பட்ட அல்லது செல்லுபடியற்ற வாக்குகள் நீக்கப்படும். செல்லுபடியற்ற வாக்குகள் நீக்கப்பட்டதன் பின்னர் எஞ்சிய வாக்குகள் கிடைக்கப்பெற்ற வாக்கு வீதம் என அழைக்கப்படும். குறித்த வாக்குகளே பாராளுமன்ற உறுப்பினர்களின் தெரிவிற்காக கணக்கிடப்படும் வாக்குகள் ஆகும் உதாரணமாக – ஒரு […]

Continue Reading

முக்கிய மத வழிப்பாட்டுத் தலங்களில் பாதுகாப்பு நீக்கப்பட்டதா..?

INTRO:  தற்போதைய அரசாங்கம் பிரதான மத வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக ஊடங்களிலும் வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன இது தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறிய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): மத வழிபாட்டுத் […]

Continue Reading

10 வருடங்களுக்கு மேலாக ஒரே தேசிய பாடசாலையில் பணியாற்றிய 9000 ஆசிரியர்கள் அடுத்த வருடம் இடமாற்றம் செய்யப்படவுள்ளனரா?

INTRO:  பாடசாலை ஆசிரியர்களின் ஆசிரியர் இடமாற்றங்கள் கல்விச் செயல்முறையை மிகவும் திறம்பட மேற்கொள்ளவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த இடமாற்றங்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக கடந்த காலங்களில் மிகவும் சர்ச்சையான சூழ்நிலை காணப்பட்டது. இதனிடையே ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களின் உண்மை தன்மையை ஆராய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது […]

Continue Reading

ஹிரு தொலைகாட்சிக்கு அரசாங்கத்தினால் சிவப்பு அறிவித்தலா?

INTRO:  சில முக்கிய ஊடகங்களின் தவறான செய்தி அறிக்கைகளால் பலர் தவறான தகவல்களை உண்மை என்று கருதுகின்றனர். அவ்வாறான செய்திகளை வெளியிட்ட ஊடக அமைப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான மற்றுமொரு தகவலின் உண்மைத்தன்மையை கண்டறிய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  […]

Continue Reading

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாரா?

INTRO:  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே. எம். ஏ . ரஸாக்(ஜவாத்) நீக்கப்பட்டார் என்ற செய்தி, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இந்த தகவல் பொய்யானது என்பதை, எமது அணியால் கண்டறியப்பட்டுள்ளது  தகவலின் விவரம் (What is the claim): Facebook Link   | Archived Link  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் கே. எம். […]

Continue Reading

சனாதிபதித் தேர்தல் 2024 உடல் வலிமையிழப்பிற்குட்பட்டவர்களால் விசேட போக்குவரத்து வசதிகளைக் கோரல்

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சட்டத்தின் 82 (4) (ஈ) ஆம் பிரிவின் பிரகாரம், உடல் வலிமையிழப்பிற்குட்பட்ட எவரேனுமொருவர் கால்நடையாகவோ, இலங்கை பொதுப் போக்குவரத்து சாதனமொன்றிலோ தமது வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்வதற்கு முடியாதவராக இருப்பின், குறித்த வாக்களிப்பு நிலையத்திற்குப் போய்வருவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக தங்களது பிரதேசத்திற்குரிய மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரிடம் தானாகவோ அல்லது தனது சார்பாக மற்றொருவரோ, குறித்த நபர் வேட்பாளர், தேர்தல் முகவர், அதிகாரம் பெற்ற முகவர், பிரதேச […]

Continue Reading