
இலங்கையில் 7 ஆவது ஜனாதிபதி தேர்தல் வருகின்ற மாதம் 16 ஆம் திகதி (16.11.2019) அன்று நடப்பெறவுள்ளது.
இந்நிலையில் அஸாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி அணி களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த செய்தி தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Madawala News என்ற பேஸ்புக் பக்கத்தில் “ஜனாதிபதி தேர்தலில் அஸாத் சாலி தலைமையிலான நுஆ போட்டி!!” என்று கடந்த முதலாம் திகதி (01.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் மடவள செய்தி இணையத்தளத்தின் லிங்கினை இணைத்துள்ளனர்.
Fact Check (உண்மை அறிவோம்)
நேற்றைய தினத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் அஸாத் சாலி வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது எமது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட 35 பேர்களின் பெயர் பட்டியல் கொழும்பு பேஜ் இணையத்தள செய்தியில் வெளியாகியிருந்தது. முழு அறிக்கை
மேலும் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் இணையத்தளத்தில் வெளியாகியிருந்த பெயர் பட்டியல் , முழு அறிக்கை




ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுபணம் செலுத்திய 41 பேர்களின் பெயர் பட்டியல் தொடர்பான வெளியான செய்தி,

வீரகேசரி நாளிதழ் (07.10.2019)
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அஸாத் சாலி தலைமையிலான நுஆ அணி களமிறங்குவதாக வெளியான செய்தி போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
