இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது பற்றி தெளிவின்றி உள்ளீர்களா?

பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு சரியான முறையில் வாக்களிப்பது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் விதத்தில் நாம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு இம்முறை பாராளுமன்றத் தேர்தலின் போது பொலன்னறுவை, மொனராகலை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் வாக்குச்சீட்டுக்கள் ஒரே நிரலில் காணப்படுகின்றன மாதிரி படம் E ஏனைய மாவட்டங்களின் வாக்குச்சீட்டுக்கள் இரண்டஜ நிரல்களாக அச்சிடப்பட்டுள்ளன மாதிரி படம் இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு வாக்களிக்கும் சரியான முறை கட்சிக்கு வாக்களித்தல் விருப்பு வாக்குகளை வழங்கும் முறை மாதிரி […]

Continue Reading

பாராளுமன்ற தேர்தலில் ஆசனங்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 225 உறுப்பினர்களுக்காக இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 8888 பேர் போட்டியிடுகின்றனர். நீங்கள் வழங்கும் வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்திற்கு எவ்வாறு  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர் என்பது தொடர்பில் விரிவாக பார்க்கலாம். முதலில் நீங்கள் வழங்கிய வாக்குகளில் நிராகரிக்கப்பட்ட அல்லது செல்லுபடியற்ற வாக்குகள் நீக்கப்படும். செல்லுபடியற்ற வாக்குகள் நீக்கப்பட்டதன் பின்னர் எஞ்சிய வாக்குகள் கிடைக்கப்பெற்ற வாக்கு வீதம் என அழைக்கப்படும். குறித்த வாக்குகளே பாராளுமன்ற உறுப்பினர்களின் தெரிவிற்காக கணக்கிடப்படும் வாக்குகள் ஆகும் உதாரணமாக – ஒரு […]

Continue Reading

வாக்களிக்கப்பதற்கு பயன்படுத்த முடியுமான அடையாள அட்டைகள்

∘ ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை ∘ செல்லுபடியான கடவுச்சீட்டு ∘ செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் ∘ ஓய்வூதியர் அடையாள அட்டை ∘ சமூக சேவைத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரஜைகள் அடையாள அட்டை ∘ ஆட்களைப் பதிவு செய்கின்ற ஆணையாளரினால் விநியோகிக்கப்பட்டுள்ள மத குருமார் அடையாள அட்டை ∘ மாவட்ட பிரதி  உதவி தேர்தல் ஆணையாளர்களினால் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டைகள் ∘ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் தேசிய அடையாள […]

Continue Reading

தேர்தல் குற்றங்கள் என்ன தெரியுமா..?

இலங்கை தண்டனைகள் சட்டக்கோவையின் பாராளுமன்றச் சட்டங்களில் அனைத்து தேர்தல்களிலும் இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பான விடயங்கள்  குறிப்பிடப்பட்டுள்ளன.  இச்சட்டங்கள் அனைத்துத் தேர்தல்களுக்கும் பொதுவான சட்டங்களாகும்.   குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் இணங்க இலக்கங்கள் மாறுபட்டிருக்கும்.  இந்த தேர்தல் குற்றங்கள் முக்கிய பல பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. தேர்தல் குற்றங்கள் பிறிதொரு நபருக்காக அல்லது பிறிதொரு நபராகத் தோற்றி வாக்களிக்கச் செல்லல் மற்றும் வாக்குச் சீட்டினை சேதப்படுத்துதல், வாக்குச் சீட்டினை மாற்றியமைத்தல்,  வாக்குச் சீட்டினைக் காட்டுதல் போன்ற குற்றங்களைப் புரிதல்  என்பன […]

Continue Reading

வெளிநாடு சென்றிருந்து வருகை தந்துள்ள வாக்காளர் ஒருவருக்கு வாக்களிக்கின்ற போது தடங்கல்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்வது எப்படி?

ஒவ்வொரு வாக்காளருக்கும் தபால்மூலம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையொன்றை அனுப்பி வைக்கின்றபோது வெளிநாடு சென்றுள்ள வாக்காளர்கள் என அறிக்கையிடப்பட்டிருப்பின் “வெளிநாடு சென்ற வாக்காளர் ஒருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது” என்ற குறிப்பு இடப்பட்டிருக்கும். இத்தகைய குறிப்புக்களில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் இடப்பட்டுள்ள வாக்காளர்கள் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருப்பின் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்கின்ற போது தனது செல்லுபடியான வெளிநாட்டுக் கடவுச்சீட்டினை எடுத்துச் செல்லல் அவசியமாகும். ஏனெனில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்ததாக நிரூபிப்பதற்கு அது பயனுள்ள ஒன்றாதலால் ஆகும். வெளிநாட்டிலிருந்து வருகை […]

Continue Reading

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு இல்லாமல் எவ்வாறு வாக்களிப்பது?

தபால் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலையீட்டின் மூலம் இந்நாட்களில் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதேவேளை,  ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை விநியோகிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு என்பது வாக்களிக்க எமக்கு விடுக்கப்படும்  அழைப்பாகும். எவ்வாறாயினும், இந்த வாக்குச்சீட்டு உங்களுக்குக் கிடைத்தாலும்  கிடைக்கப் பெறாவிட்டாலும், வாக்களிப்பதில் அது பாதிப்பை ஏற்படுத்தாது என பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன […]

Continue Reading

சனாதிபதித் தேர்தல் 2024 உடல் வலிமையிழப்பிற்குட்பட்டவர்களால் விசேட போக்குவரத்து வசதிகளைக் கோரல்

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சட்டத்தின் 82 (4) (ஈ) ஆம் பிரிவின் பிரகாரம், உடல் வலிமையிழப்பிற்குட்பட்ட எவரேனுமொருவர் கால்நடையாகவோ, இலங்கை பொதுப் போக்குவரத்து சாதனமொன்றிலோ தமது வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்வதற்கு முடியாதவராக இருப்பின், குறித்த வாக்களிப்பு நிலையத்திற்குப் போய்வருவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக தங்களது பிரதேசத்திற்குரிய மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரிடம் தானாகவோ அல்லது தனது சார்பாக மற்றொருவரோ, குறித்த நபர் வேட்பாளர், தேர்தல் முகவர், அதிகாரம் பெற்ற முகவர், பிரதேச […]

Continue Reading

வலிமையிழப்பொன்றிற்கு இலக்காகிய வாக்காளரொருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை அடையாளமிட்டுக் கொள்வதற்கு உதவியாளர் ஒருவரை உடனழைத்துச் செல்வதற்குத் தேவையான சட்ட விதிகளை ஏற்பாடு செய்தல்.

2011 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் மூலம் திருத்தியமைக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டின் இன் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 38(2) ஆம் உப பிரிவிற்கமைய எதிர்வரும் தேர்தல்களின் போது முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ கட்புலப் பாதிப்பொன்றிற்கு அல்லது வேறேதேனும் உடல் ரீதியான வலிமையிழப்பொன்றிற்கு இலக்கான வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வைத்து வாக்குச் சீட்டினை அடையாளமிட்டுக் கொள்வதற்காக உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்லத்தக்கவாறான சட்ட விதிகள் […]

Continue Reading

இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை சரியாக இடுவது எப்படி?

நாளுக்கு நாள் சூடுபிடிக்கும் 2024 ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வரலாற்றில் 39 வேட்பாளர்களுடன் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக மாறியுள்ளது.  இந்த ஆண்டு தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் பல விமர்சகர்கள், தேர்தலில் பல முக்கிய வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டியை காண முடியும் என சுட்டிக்காட்டுகின்றனர். அதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளில் அரைவாசி அதாவது  50% வாக்குகளை எந்த ஒரு வேட்பாளரும் பெறுவது கடினம் என பலர் ஊகிக்கின்றனர். கிக்கின்றனர் கூட […]

Continue Reading

இரண்டாவது விருப்பு வாக்கை எப்படி எண்ணுவது?

இரண்டாவது விருப்பு  வாக்கு எண்ணிக்கை குறித்து முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு விளக்கமளித்துள்ளார். எந்த வேட்பாளரும்  ( அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளில்) 50 சதவீதம் வாக்குகளை பெறவில்லை என்றால், இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும். இது கீழே குறிப்பிடப்பட்டுள்ள உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் போது, ​​வாக்காளர்கள் 1, 2, 3 ஆகிய எண்களைப் பயன்படுத்தி வேட்பாளர்களுக்கு அவர்களின் விருப்பு வாக்குகளை அளிக்கலாம்.  தமது வாக்குகளை செலுத்தும் போது வாக்காளர் ஒருவருக்கு […]

Continue Reading

தேர்தல் முறைப்பாடுகளை தெரிவிக்க கூடிய வழிமுறை என்ன தெரியுமா?

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு இம்முறை தேர்தல்கள்  ஆணைக்குழுவிற்கு ஆதரவளிக்கும் வகையில், ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் PAFRAL அமைப்பு தயார் செய்துள்ளது. அதன் அடிப்படையில் நாட்டில் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வேட்பாளரையோ அல்லது கட்சியையோ பாதிக்கக்கூடிய சம்பவங்கள், வன்முறைச் செயல்கள் அல்லது சம்பவங்கள் இடம்பெற்றால், தமது அமைப்பு தீவிரமாக தலையிட்டு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார் அதன் அடிப்படையில், தேர்தல் புகார் […]

Continue Reading

வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட 22 அரசியல் கட்சிகளும் மற்றுமொரு அரசியல் கட்சியும் அவற்றில் உள்ளடங்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக 17 […]

Continue Reading

தனது முதல் வாக்கின் மூலம் ஜனாதிபதியை தெரிவுசெய்ய போகும் புதிய வாக்காளர்கள் 

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 876,469 என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கையை விட 876,469 பேர் இவ்வாண்டு  ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆனைக்குழு கடந்த திங்கள் அன்று அறிவித்திருந்தது. தற்போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகவும், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் […]

Continue Reading