இலங்கை பொதுஜன பெரமுனவின் இளையோர் மகாநாட்டின் ஆகஸ்ட் 24 திகதி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.குறித்த நிகழ்விற்கு இலங்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷ கலந்துக்கொண்டார்.

குறித்த மகாநாட்டிற்கு வருகை தந்த ஊடகவியலாளர் தமது அடையாள அட்டையினை காண்பித்து உள்நுழைய முற்பட்ட வேளையில் தாக்கப்பட்டதாக புகைப்படத்துடன் வெளியாகியுள்ள செய்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவைதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்நிகழ்வுகள் அனைத்திற்கும் பிறகு, குறித்த மகாநாட்டிற்கு வருகை தந்த ஊடகவியலளார் தாக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டுள்ளது.

தகவலின் விவரம்:

குறித்த பதிவானது சமூகவலைத்தளங்களில் ” தலைவர்கள் வருவதற்கு முன்னே இவ்வாறு இடம்பெற்றால், தலைவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன நடக்கும் ” என்ற பதிவோடு பகிரப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்விற்கு ஊடகவியலாளர்கள் சிலர் உள்நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து ஊடக சந்திப்பில் நாமல் ராஜபக்ஷவிடம் வினவிய வேளையில் அக்கூட்டத்தினை யூடியுப் ஊடாக பார்வையிடலாம் என தெரிவித்திருந்த போதிலும், அதன் பிறகு குறித்த சம்பவம் தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் தமது மன்னிப்பினை ஊடக அறிக்கை மூலம் கேட்டிருந்தார்.

Mahajanathawa Facebook Post LinkArchived Link
Facebook Post LinkArchived Link
Facebook Post LinkArchived Link
Facebook PostArchived Link

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த புகைப்படத்தினை google reverse image உபயோகித்து பரிசோதனை செய்தவேளையில் 2009 ஆம் குறித்த படம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

C:-Users-SGPrabu-Downloads-screenshot-www.google.com-2019.09.04-19_25_15.png

மேலும், தேடுதலில் ஈடுப்பட்ட வேளையில், ஆகஸ்ட் 2009 இல் அங்குலான பிரதேசத்தில் நடந்த ஒரு போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் எறியப்பட்ட கல்லினால் காயமடைந்த தெரண ஊடகவியலாளரின் புகைப்படம் என்பது தெரியவந்தது. முழு அறிக்கை

போலி புகைப்படமானது வெளியான பின்னர் பல பேஸ்புக் பக்கங்கள் குறித்த புகைப்படம் தொடர்பான உண்மை தன்மையினை வெளியிட்டு பதிவேற்றம் செய்திருந்தது.

Facebook Post

டுவிட்டரில் குறித்த புகைப்படமானது போலியானது என தெரிவித்து டுவிட் செய்யப்பட்டிருந்தது.

Twitter Post

கடைசி முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பொதுஜன பெரமுனவினால் நடத்தப்பட்ட இளையோர் மகாநாட்டின் போது ஊடகவியலாளர் தாக்கப்பட்டதாக வெளியான புகைப்படமானது, 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற இளையோர் மகாநாட்டிற்கு குறித்த புகைப்படம் தொடர்பானதல்ல.

Avatar

Title:SLPP இளையோருக்கான மகாநாட்டின் போது ஊடகவியலாளர் தாக்கப்பட்டாரா..?

Fact Check By: Nelson Mani

Result: False