
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து பேசப்பட்டு வருகின்ற வேளையில் முத்தையா முரளிதரன் கொழும்பு ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08.09.2019 ) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்த நாள் தனக்கு மகிழ்ச்சியான தினம் எனத் தெரிவித்திருந்தமை தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தன.
தகவலின் விவரம்:

டுடே ஜப்நா – Today Jaffna | Archived Link
குறித்த செய்தியில் #முரளிதரன்.!
உன் பந்து சுழன்று விக்கெட்டுக்களை சரித்தபோதெல்லாம் தமிழனாக மகிழ்ந்தவர்கள் நாம்.!
நீ சாதனைத்தமிழனான போது பெருமிதம் கொண்டவர்கள் நாம்.!
இன்று உன் நாக்கு ஏதிலிகளாம் எமக்கெதிராக சுழல்கிறது.!
உன் பரம்பரை அடிமையாக வாழ்ந்ததுபோல, நீ சிங்களத்தை நக்கி பிழைப்பது போல் நாம் வாழ்வோமென்று நினைக்காதே.!
விடுதலை என்னும் நெருப்பாற்றில் நீந்தி , வெந்தணலான மறவர்களின் அனல் காற்று இன்னும் வீசிக்கொண்டேயிருக்கின்றது.!
அந்த அனல்காற்ற உன் போன்றவர்களின் துரோகத்தை சாம்பலாக்கும்.! என்று பதிவோடு பகிரப்பட்டு வருகின்றது

Nawalapitiya Memes | Archived Link

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த செய்தி தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில், தான் கூறியதை ஊடகங்கள் திரித்து எழுதியுள்ளதாகவும், தான் விடுதலைப் புலிகள் பற்றி எதுவும் விமர்சிக்கவில்லை எனவும் முரளிதரன் தெரிவித்த விவரம் கிடைத்தது.

மேலும் நாம் ஆய்வினை மேற்கொண்ட வேளையில் அவர் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று ஆற்றிய உரையாடலையும் ஆராய்ந்து பார்த்தோம்.
குறித்த வீடியோவில் அவர் ”விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான மகிழ்ச்சியான நாள்” என்று எங்கேயும் தெரிவித்திருக்கவில்லை.

இது குறித்து ஆதவன் ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டிருந்த முரளிதரன் ஜாதி, மத மற்றும் இன போன்றவற்றை உபயோகித்து அரசியல் பண்ணும் அரசியல் வாதிகளும், ஊடகங்களுமே இவ்வாறான போலியான தகவல்களை பரப்புகின்றன.

மேலும் இது குறித்த ஊடக சந்திப்பு தொடர்பாக ஆங்கில பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தியிலும் முரளி விடுதலை புலிகள் பற்றி கூறியதாக பரப்படும் எவ்வித கருத்தும் பதியபடவில்லை. முழு அறிக்கை
முடிவு
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் முத்தையா முரளிதரன் குறித்து சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் போலியானவை என உறுதி செய்யப்படுகிறது.

Title:விடுதலைப்புலிகள் குறித்து முரளிதரன் உண்மையில் விமர்சனம் தெரிவித்தாரா…?
Fact Check By: Nelson ManiResult: False
