
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இயங்கும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனா (எஸ்எல்பிபி), எதிர்வரும் தேர்தலில் அதிபர் வேட்பாளராக திரு.கோத்தபய ராஜபக்சவை அறிவித்துள்ளது. இதையடுத்து, அவருக்கு ஆதரவாகவும், அவரை எதிர்த்தும் சமூக ஊடகங்களில் பலவிதமான பதிவுகள் வைரலாகி வருகின்றன.
அதேசமயம், ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பி) இதுவரை தனது அதிபர் வேட்பாளர் யார் என அறிவிக்கவில்லை. ஆனால், கண்டிப்பாக, அக்கட்சியின் துணைத் தலைவரும், தற்போது அமைச்சராகவும் உள்ள சாஜித் பிரேமதாசா களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக, அவரை பற்றியும் சமூக ஊடகங்களில் விமர்சனம் முன்வைக்கப்படுவதை காண முடிகிறது.
இத்தகைய சூழலில்தான், இலங்கையை சேர்ந்த மாடல் அழகி சாந்தனி ஃபெர்னாண்டோ, எஸ்எல்பிபி கட்சியின் தேர்தல் சின்னம் பதித்த டீ ஷர்ட் அணிந்தபடி, ஒரு கையில் கோத்தபய ராஜபக்சவின் படத்தை ஏந்தி பிடிப்பது போன்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மையில், இந்த படத்தை முதலில் “Presidential Election 2020 Sri Lanka” என்ற ஃபேஸ்புக் பக்கம்தான் வெளியிட்டது. பின்னர், இது வைரலானதை தொடர்ந்து, இதுதொடர்பாக, சாந்தனி ஃபெர்னாண்டோவின் மறுப்பை பெற்று, அதன்பேரில் மறுவிளக்கமும் வெளியிட்டுள்ளது.
“Voice of a People’s Government” எனும் ஃபேஸ்புக் பக்கம், இதனை எஸ்எல்பிபி கட்சி ஆதரவாளர்களின் சோக மனநிலையை காட்டுவதாக உள்ளதென விமர்சித்துள்ளது. (බයියන්ගේ හිගන වැඩ)

Facebook Post | Archived Link |
“Live Sri Lanka” என்ற ஃபேஸ்புக் பக்கமும் இதனை, “எஸ்எல்பிபி.,யின் கீழ்த்தரமான அரசியல், என வர்ணித்துள்ளது. (පොහොට්ටුවේ හිගන දේශපාලනය)

Facebook Post | Archived Link |
Same post was published by Facebook user “ධනුෂ්ක තිරාණගම” as well

“Maduka Thaksala Fernando” எனும் ஃபேஸ்புக் பயனாளர் இதனை, எஸ்எல்பிபி கட்சி ஆதரவாளர்களின் வெட்கக்கேடான செயல் என வர்ணித்துள்ளார். (ලැජ්ජ නැති බයියෝ)

Facebook Post | Archived Link |
அதேசமயம், இதுபற்றிய தேடலின்போது, சாந்தனி ஃபெர்னாண்டோ, யூஎன்பி துணைத் தலைவரும், தற்போது அமைச்சராக உள்ள சாஜித் பிரேமதாசாவின் புகைப்படத்தை வைத்தபடி, அவரை ஆதரிப்பது போல நிற்கும் ஒரு புகைப்படத்தையும் காண நேரிட்டது. இதனை, G I R L class என்ற ஃபேஸ்புக் பக்கத்தினர் பகிர்ந்துள்ளதோடு, இதுபற்றி ஃபேஸ்புக் நிர்வாகத்திற்கு ரிப்போர்ட் அடிக்கும்படியும் வலியுறுத்தியுள்ளனர்.

Facebook Post | Archived Link |
இதே புகைப்படம், UNP♥ බැතිමත්තු??? எனும் ஃபேஸ்புக் குரூப்பில், Chinthaka Lakshan என்பவரால் கீழ்க்கண்ட வகையில் பகிரப்பட்டுள்ளது.
Facebook Post | Archived Link |
உண்மை விவரம் (සත්ය තොරතුරු විමර්ශනය කිරීම)
சாந்தனி ஃபெர்னாண்டோவின் கையில் கோத்தபய ராஜபக்ச மற்றும் சாஜித் ஃபெர்னாண்டோ புகைப்படங்கள் உள்ளதாகக் கூறி பகிரப்பட்ட 2 புகைப்படங்களை நாம் காண நேரிட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் வகையில், உண்மை அறிந்துகொள்ளும் நோக்கில், சாந்தனி ஃபெர்னாண்டோ பற்றிய புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம்.

இதன்படி, சாந்தனி ஃபெர்னாண்டோ தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை எடுத்து, அவரவர் தங்களது விருப்பத்திற்கேற்ப தவறாக சித்தரித்து பகிர்ந்துள்ளனர் என தெரியவருகிறது.

இது மட்டுமின்றி, சாந்தனி ஃபெர்னாண்டோ ,தனது புகைப்படத்தை தவறாகச் சித்தரித்து வதந்தி பரப்பியவர்கள் உள்பட அனைவருக்கும், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டதை காண நேரிட்டது. அதில், தான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
Sandani Fernando Facebook Post | Archived Link |

இதன்படி, கடந்த மார் 18ம் தேதி சாந்தனி ஃபெர்னாண்டோ இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தை எடுத்து, சிலர் தவறாகச் சித்தரித்து பகிர்ந்துள்ளதாக, தெரியவருகிறது. இது பல தரப்பிலும் வைரலாக பரவியதை தொடர்ந்து, இதன்பேரில் மறுப்பு தெரிவித்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றையும் சாந்தனி ஃபெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.
முடிவு
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் “இலங்கை மாடல் சாந்தனி ஃபெர்னாண்டோ, கோத்தபய ராஜபக்ச அல்லது சாஜித் பிரேமதாசாவை ஆதரித்தார்” என்ற தலைப்பில் பகிரப்படும் செய்திகள் அனைத்தும் தவறானவை என உறுதி செய்யப்படுகிறது.

Title:இலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்ச அல்லது சாஜித் பிரேமதாசாவை ஆதரித்து மாடல் அழகி சாந்தனி ஃபெர்னாண்டோ ஓட்டு கேட்டாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
