சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு இம்முறை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆதரவளிக்கும் வகையில், ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் PAFRAL அமைப்பு தயார் செய்துள்ளது.
அதன் அடிப்படையில் நாட்டில் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வேட்பாளரையோ அல்லது கட்சியையோ பாதிக்கக்கூடிய சம்பவங்கள், வன்முறைச் செயல்கள் அல்லது சம்பவங்கள் இடம்பெற்றால், தமது அமைப்பு தீவிரமாக தலையிட்டு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்
அதன் அடிப்படையில், தேர்தல் புகார் ஏதேனும் காணப்படும் கீழ் வரும் வாட்ஸ்அப் எண்கள், தொலைநகல் அல்லது மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. புகார் அளித்தவரின் அடையாளத்தை குறித்த நபரின் அனுமதியின்றி வெளியிட மாட்டோம் என்றும் பாஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது
மாகாண தொலைபேசி எண்கள் (Whatsapp)
மேல் மாகாணம் 070-1084006
தென் மாகாணம் 070-1083949
ஊவா மாகாணம் 070-1084034
மத்திய மாகாணம் 070-1083974
சப்ரகமுவ மாகாணம் 070-1083934
வடமேற்கு மாகாணம் 070-1084013
வட மத்திய மாகாணம் 070-1083998
கிழக்கு மாகாணம் 070-1083911
வடக்கு மாகாணம் 070-1083929
உங்கள் புகார்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Whatsapp எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
தொலைபேசி இலக்கம் 011-2558570 / 070- 1084127
Whatsapp: 070-1084127
தொலைநகல்: 011-2558572
மின்னஞ்சல்: [email protected]
மேலும், கடந்த 12 ஆம் திகதி மாலை 4.30 மணி வரை தேர்தல்கள் ஆணை குழுவிடம் முன்வைக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கையை இங்கு பார்வையிடலாம்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
