INTRO :
இமய மலையில் வாழும் 200 வயது துறவி என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” 200 வயதான துறவி இமாலயா... இவர்களை போன்றவரை நாம் காண புண்ணியம் செய்திருக்க வேண்டும்

ஓம் நமசிவாய.🙏 “ என கடந்த மாதம் 21 ஆம் திகதி (21.02.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற குறித்த வீடியோவினை நன்கு அவதானித்த போது அந்த வீடியோ டிக்டொக்கில் இருந்து எடுக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

அதில் இருந்த பயனாளி auyary_sry என்ற டிக்டொக் கணக்கினை நாம் தேடிய போது குறித்த துறவி தொடர்பான பல வீடியோக்கள் அடங்கிய டிக்டொக் கணக்கு எமக்கு கிடைக்கப்பெற்றது.



tiktok.comI Archive

டிக்டொக் குறித்த வயோதிக துறவியின் முதல் பதிவியிருந்த விபரத்தினை நாம் மொழிபெயர்த்து பார்த்தபோது, இவரின் பெயரினை Luang Ta என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

அதனை கொண்டு நாம் கூகுளில் தேடுதல் செய்த போது இவரின் வயது 109 என பல செய்திகள் காணக்கிடைத்தன.

இவரை Luang Pho Yai என்ற பெயரில் கூட அழைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவரின் பேத்தி டிக்டொக்கில் இவர் பற்றி வீடியோக்களை பகிர அது மிகவும் வைரல் ஆகியுள்ளது. குறிப்பாக, இவர் சிறு குழந்தையின் தலையில் கை வைத்து பிரார்த்திக்கும் வீடியோ சுமார் 90 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.

marca.com I Archive

மேலும் சில இணையத்தளங்களில் வெளியான செய்திகள்

the-sun.com I Archive

hitc.com I Archive

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், இமய மலையில் வாழும் 200 வயது துறவி என பகிரப்படும் வீடியோ போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எமது இந்திய தமிழ்ப்பிரிவினர் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்


எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு


எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இமய மலையில் வாழும் 200 வயது துறவியா?

Fact Check By: S G Prabu

Result: False