INTRO :
திபெத்தில் கண்டெடுக்கப்பட்ட 201 வயது துறவியின் உடல் என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” நேபாள மலைப்பகுதியில் திபெத்திய துறவி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 201 வயதான அவர் உலகின் மிக வயதான நபராக கருதப்படுகிறார். அவர் ஆழ்ந்த மயக்கம் அல்லது தியானத்தில் "தகடேட்" என்று அழைக்கப்படுகிறார். மலைக் குகையில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது அவரை மம்மி என்று நினைத்தார்கள். இருப்பினும், மம்மி என்று அவர்கள் நினைத்ததை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அவருக்கு முக்கிய அறிகுறிகள் இருப்பதையும் உயிருடன் இருப்பதையும் கண்டுபிடித்தனர்! அவரது இடத்தில் ஒரு துண்டு காகிதத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அதில்

"#face #book-#இல் #நீங்கள் #படிக்கும் #எல்லா #முட்டாள்தனங்களையும் #நம்புவதை #நிறுத்துங்கள்" என்று எழுதப்பட்டு இருந்தது “ என கடந்த மாதம் 26 ஆம் திகதி (26.11.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Graphical user interface, text, application  Description automatically generated

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் பகிரப்படும் பதிவினை வாசித்த போது, அது நகைச்சுவை பதிவாக இருப்பினும் அதன் கீழ் பலர் பதிவிட்ட கமெண்டுக்களில் அது முதலில் உண்மை என தாங்கள் நம்பியதாக பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்திய போது, இது 2018 ஆம் ஆண்டு குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தமை எம்மால் கண்டறியப்பட்டது.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த புத்த மத துறவி லுவாங் போர் பியான் 2017 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி தன்னுடைய 92 ஆவது வயதில் உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் பதப்படுத்தப்பட்டு சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து, புத்த மத முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்ய அவரது உடல் சவப்பெட்டியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

அப்போதும் அவரது முகம் சிரித்த முகத்துடன் இருந்துள்ளது. மறைந்த துறவிக்கு புதிய ஆடை அணிவித்து, சிரித்தபடி இருக்கும் அவரை புகைப்படம் எடுத்தனர் என்று செய்திகள் கிடைத்தன.

Text  Description automatically generated

thesun.co.uk I Archive 1 I timesnownews.com I Archive 2

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், திபெத்தில் கண்டெடுக்கப்பட்ட 201 வயது துறவியின் உடல் என பகிரப்படும் தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.


எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:திபெத்தில் கண்டெடுக்கப்பட்ட 201 வயது துறவியின் புகைப்படம் உண்மையானதா?

Fact Check By: S G Prabu

Result: Satire